Wednesday 21 September 2011

பயர்பொக்சின் சிறப்பம்சங்கள்!!

இணைய உலகில் மக்களால் அதிகளவு பயன்படுத்தப்படும் இன்டர்நெட் பிரவுசராக பயர்பொக்ஸ் இடம் பிடித்து வருகிறது.
இதன் வேகம், அடிக்கடி மேம்படுத்தப்படும் செயல்பாடு, அதிகமான எண்ணிக்கையில் வேகம் தரும் எளிய ஆட் ஆன் தொகுப்புகள், ஓப்பன் சோர்ஸ் முறை எனப் பல அம்சங்கள் இதனைப் பெரும்பாலான மக்களிடம் கொண்டு சேர்த்துள்ளன.
இவை மட்டுமின்றி பயர்பொக்ஸ் பிரவுசரிலேயே பல பயன்தரும் செயல்பாடுகள் தரப்பட்டுள்ளன. அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம்.
1. தேடல்களை சுருக்குச் சொற்கள் மூலம் மேற்கொள்ள: பயர்பொக்ஸ் பிரவுசரின் அட்ரஸ் கட்டத்திலேயே சொற்களைக் கொடுத்து ஓர் இணைய தளத்தில் அந்த சொல் எங்கிருக்கிறது என்று தேடலாம்.
எடுத்துக்காட்டாக அமேஸான் டாட் காம்(Amazon.com) தளத்தில் டச்பேட்(TouchPad) என்ற சொல் எங்கெல்லாம் வருகிறது என்று தேட பயர்பொக்ஸ் பாரில் "amazon touchpad" என டைப் செய்து என்டர் தட்டினால் போதும்.
இதற்கான செட்டிங்ஸ் எப்படி அமைப்பது எனப் பார்ப்போம். முதலில் அந்த இணைய தளம் சென்று அதில் உள்ள சர்ச் பாக்ஸைக் கண்டறியவும். பின்னர் அந்த சர்ச் கட்டத்தில் ரைட் கிளிக் செய்திடவும்.
கிடைக்கும் மெனுவில் "Add Keyword for this search" என்றிருப்பதைத் தேர்ந்தெடுக்கவும். இதற்கான புக்மார்க் மற்றும் கீ வேர்ட் கேட்கப்படும். கீ வேர்ட் உருவாக்கி அதனை ஒரு புதிய போல்டரில் சேவ் செய்திடவும்.
இப்போது உங்கள் கீ வேர்ட் தயாராய் உள்ளது. இதனை மேலே கூறியபடி பயர்பொக்ஸ் அட்ரஸ் கட்டத்தில் கொடுத்து என்டர் செய்திட குறிப்பிட்ட தளத்தில் தரப்பட்டுள்ள சொற்கள் தேடிக் காட்டப்படும்.
2. பல தளங்களுடன் திறப்பு: வழக்கமாக நாம் அடிக்கடி கட்டாயமாக முதல் தளமாகப் பார்க்க விரும்பும் இணைய தளத்தினை நம் ஹோம் பேஜாக வைத்திருப்போம்.
உங்களுக்கு இன்னும் சில தளங்களும், பிரவுசர் திறந்திடும் போதே தேவை எனில் என்ன செய்வீர்கள்? பயர்பொக்ஸ் அதற்கான வழியினைக் கொண்டுள்ளது.
பிரவுசரை இயக்கி Options > General எனச் செல்லவும். பின்னர் ஹோம் பேஜ்(home page) பீல்டில் நீங்கள் ஒரே நேரத்தில் திறக்கப்பட வேண்டிய தளங்களின் முகவரிகளை டைப் செய்திடவும். ஒரு முகவரிக்கும் மற்றொன்றுக்கும் இடையே பைப் அடையாளம் டைப் செய்திடவும்.
3. ஆர்.எஸ்.எஸ். மேம்படுத்துதல்: நீங்கள் அடிக்கடி இணையதளம் ஒன்றைப் பார்வையிடுபவராக இருந்தால் குறிப்பாக செய்திகளுக்கான தளமாக இருந்தால் இதற்கான ஒரு புக்மார்க் தயார் செய்து அது தானாக செய்திகளை அப்டேட் செய்திடும் வகையில் அமைக்கலாம்.
பயர்பொக்ஸ் டூல்பாரில் ரைட் கிளிக் செய்திடவும். "Customize" என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் அந்த ஆர்.எஸ்.எஸ்.லோகோவின் மீது அழுத்தியவாறே இழுத்து வந்து டூல்பாரில் விடவும். இப்போது எந்த தளத்திலிருந்து செய்திகள் கிடைக்க விரும்புகிறீர்களோ, அங்கு செல்லவும். பின்னர் டூல்பாரில் உள்ள பட்டனை கிளிக் செய்திடவும்.
இதில் புக்மார்க் செய்த பெயரை என்டர் செய்திடவும். பின்னர் Add என்பதில் கிளிக் செய்திடவும். இனி செய்திகள் தாமாக அப்டேட் செய்யப்பட்டு உங்களுக்குக் கிடைக்கும்.
4. விரல் நுனியில் செட்டிங்ஸ்: இணைய உலாவிற்குத் தாங்கள் பயன்படுத்தும் பிரவுசர்களில் அனைவரும் நமக்கான செட்டிங்ஸ் சிலவற்றை ஏற்படுத்தியிருப்போம். இதனால் மற்ற கணணிகளில் பிரவுஸ் செய்திடுகையில் தடுமாற்றம் ஏற்படலாம். புக்மார்க்குகள் இருக்காது; சில தீம் செட்டிங்ஸ் கிடைக்காது.
பயர்பொக்ஸ் இதற்கான வழி ஒன்றைத் தருகிறது. இந்த பிரவுசர் செட்டிங்ஸ்களுடன் பயர்பொக்ஸ் பிரவுசரை, ஒரு யு.எஸ்.பி. பிளாஷ்ட்ரைவில் பதிந்து கொள்ளலாம். அந்த ட்ரைவினை புதிய கணணியில் இணைத்து இயக்கலாம். எந்த பிரச்னையுமின்றி வேகமாக பிரவுஸ் செய்திட இது உதவும்.
5. கீபோர்ட் ஷார்ட்கட் தொகுப்புகள்: பயர்பொக்ஸ் பிரவுசர் அனைத்து செயல்பாடுகளுக்கும் ஷார்ட்கட் கீ தொகுப்புகளை அனுமதிக்கிறது. இந்த ஷார்ட்கட் கீ தொகுப்புகள் அனைத்தும் முழுமையாக http://support.mozilla.com/en-US/kb/Keyboard%20shortcuts?s=keyboard+shortcuts&r=0&as=s என்ற முகவரியில் மொஸில்லா தந்துள்ளது. இவற்றைப் பதிந்து வைத்துப் படித்துப் பார்த்து பயன்படுத்தவும்.

பேஸ்புக் இறுதியாக அறிமுகப்படுத்தியிருக்கும் புதிய வசதி!


நாளுக்கு நாள் புதுப்புது அம்சங்களை அறிமுகப்படுத்தும் சமூக வலையமைப்பான facebook , தனது news feed எனும் செய்தியோடையில் real time updates எனும் நிஜ நேர மேம்படுத்தல் வசதியை இணைத்துள்ளது.

facebook இனால் கடந்த பத்து நாட்களுக்குள் அறிவிக்கப்பட்ட மூன்றாவது புதிய சேவை இதுவாகும். இதன்மூலம் இறுதியாக facebook ஐ உபயோகித்த நேரத்தை அறிந்துகொள்ள முடிவதுடன், பெரிய புகைப்படங்களையும் இணைக்க முடியும்.

இதனால் தொடர் பாவனையாளர்களுக்கு மிகவும் அண்மைய தகவல்கள் தானாகவே வழங்கப்படும் அதேவேளை குறைந்தளவு பாவனையாளர்களுக்கு தகவல் தொகுப்புகள் அடங்கிய பிறிதொரு பகுதி பார்வைக்கு கிட்டும். .

facebook இன் செய்தியோடை தினந்தோறும் 750 மில்லியன் அங்கத்தவர்களால் பார்வையிடப்படுகின்றது.

அதிகளவு புதிய விடயங்கள் தற்போது வெளியிடப்படுவதால் இதனை facebook இன் “அறிமுக காலம்” என வர்ணித்துள்ள அதன் நிறுவனர் Mark Zuckerberg இந்த புதிய மாற்றமானது தற்போது பாவனையிலுள்ள Top news மற்றும் Most Recent ஆகிய தேர்வுகளை ஒருங்கிணைக்கும் நோக்கத்தை கொண்டதென தெரிவித்துள்ளார்.

facebook தனது செய்தியோடையிலுள்ள பெரிய அளவிலான புகைப்படங்களை ஒன்றிணைத்து வலதுபக்க மேல்மூலையில் “ Ticker ” எனும் புதிய அம்சமொன்றையும் இணைக்கவுள்ளது.இதனால் தமது நண்பர்களின் செயற்பாடுகளை நேரடியாக அவதானிக்க முடியும்.

இந்த புதிய மாற்றங்களை தளத்தில் பார்வையிடமுடியுமென facebook பேச்சாளரொருவர் தெரிவித்துள்ளார்.

கணணியில் எவ்வளவு நேரம் பணிபுரிந்தோம் என்பதனை அறிந்து கொள்வதற்கு


நாம் கணணியில் எந்த அப்ளிகேஷனில் பணிபுரிந்தாலும், விளையாட்டினை விளையாடினாலும், இணைய இணைப்பில் தளங்கள் பார்த்தாலும் மொத்த விபரங்களையும் எளிதில் அறிந்து கொள்ளலாம்.
அதுமட்டும் அல்லாமல் எந்த எந்த அப்ளிகேஷனில் எவ்வளவு நேரம் பணிபுரிந்தோம் என்பதனையும் துல்லியமான நேரம் முதற்கொண்டு அறிந்து கொள்ளலாம்.
6 எம்.பி.கொள்ளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்து கொள்ளவும். நீங்கள் இதனை நிறுவியதும் ஒரு விண்டோ ஓப்பன் ஆகும். இதில் கணணி யூசேஜ் பச்சை நீறத்தில் வந்து விடும். சிகப்பு நிறம் கணணி உபயோகம் இல்லாத நேரத்தினை குறிக்கும்.
நீங்கள் எந்த எந்த அப்ளிகேஷன்களை எவ்வளவு நேரம் உபயோகித்தீர்கள் என இதில் உள்ள சார்ட் வைத்து எளிதில் அறிந்து கொள்ளலாம். எந்த எந்த அப்ளிகேஷனை நீங்கள் திறந்து பார்த்தீர்கள் என அறிந்து கொள்ளலாம்.
இதில் நேரத்தினையும் செட் செய்து விடலாம். இது தவிர அன்றைய பொழுதில் நீங்கள் எவ்வளவு நேரம் கணணியில் பணிபுரிந்தீர்கள் என்பதனையும் அறிந்து கொள்ளலாம்.
நீங்கள் அப்ளிகேஷன் டேபில் கர்சரை கொண்டு செல்ல எந்த இடத்தில் நீங்கள் எந்த அப்ளிகேஷனை பயன்படுத்தினீர்கள் என்கின்ற விவரம் தெரியும்.
தரவிறக்க சுட்டி