Sunday, 10 July 2011

பூமியில் மோதும் கற்களால் பாதிக்கும் நாடுகள்!


விண்வெளியில் உள்ள சிறு கோள்கள் பூமியில் மோதினால் பேரழிவிற்கு உள்ளாகக்கூடிய நாடுகளின் பட்டியலை விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர்.
சவுத்ஹெம்டன் பல்கலைக்கழக நிபுணர்கள் இப்பட்டியலை வெளியிட்டுள்ளனர். இப்பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள நாடுகள் மிகுந்த அழிவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சீனா, அமெரிக்கா, இந்தோனேசியா, இந்தியா, ஜப்பான், பிலிபைன்ஸ், இத்தாலி, பிரிட்டன்,
பிரேசில், நைஜிரியா ஆகிய நாடுகள் இந்த சிறு கோள்களின் தாக்குதலுக்கு உள்ளானால் அங்கு மிகுந்த உயிரிழப்புக்கள் நிலவும் சாத்தியம் உள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். சுமார் 12 மைல்கள் விட்டமுடைய சிறுகோளொன்று பூமியில் மோதினால்ல் இங்குள்ள தாவரங்கள் மற்றும் விலங்குகள் அனைத்தும் முற்றிலும் அழிவுக்கு உள்ளாகும் என்வும் ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.இத்தகைய ஒரு தாக்குதல் 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்ததாகவும் இதன் போதே டைனோசர்கள் முற்றாக அழிந்ததாகவும் அவர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.