Showing posts with label Internet. Show all posts
Showing posts with label Internet. Show all posts
Monday, 17 March 2014
Top 10 Clever Uses for Dropbox
Saturday, 8 October 2011
Wednesday, 21 September 2011
பயர்பொக்சின் சிறப்பம்சங்கள்!!
இதன் வேகம், அடிக்கடி மேம்படுத்தப்படும் செயல்பாடு, அதிகமான எண்ணிக்கையில் வேகம் தரும் எளிய ஆட் ஆன் தொகுப்புகள், ஓப்பன் சோர்ஸ் முறை எனப் பல அம்சங்கள் இதனைப் பெரும்பாலான மக்களிடம் கொண்டு சேர்த்துள்ளன.
இவை மட்டுமின்றி பயர்பொக்ஸ் பிரவுசரிலேயே பல பயன்தரும் செயல்பாடுகள் தரப்பட்டுள்ளன. அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம்.
1. தேடல்களை சுருக்குச் சொற்கள் மூலம் மேற்கொள்ள: பயர்பொக்ஸ் பிரவுசரின் அட்ரஸ் கட்டத்திலேயே சொற்களைக் கொடுத்து ஓர் இணைய தளத்தில் அந்த சொல் எங்கிருக்கிறது என்று தேடலாம்.
எடுத்துக்காட்டாக அமேஸான் டாட் காம்(Amazon.com) தளத்தில் டச்பேட்(TouchPad) என்ற சொல் எங்கெல்லாம் வருகிறது என்று தேட பயர்பொக்ஸ் பாரில் "amazon touchpad" என டைப் செய்து என்டர் தட்டினால் போதும்.
இதற்கான செட்டிங்ஸ் எப்படி அமைப்பது எனப் பார்ப்போம். முதலில் அந்த இணைய தளம் சென்று அதில் உள்ள சர்ச் பாக்ஸைக் கண்டறியவும். பின்னர் அந்த சர்ச் கட்டத்தில் ரைட் கிளிக் செய்திடவும்.
கிடைக்கும் மெனுவில் "Add Keyword for this search" என்றிருப்பதைத் தேர்ந்தெடுக்கவும். இதற்கான புக்மார்க் மற்றும் கீ வேர்ட் கேட்கப்படும். கீ வேர்ட் உருவாக்கி அதனை ஒரு புதிய போல்டரில் சேவ் செய்திடவும்.
இப்போது உங்கள் கீ வேர்ட் தயாராய் உள்ளது. இதனை மேலே கூறியபடி பயர்பொக்ஸ் அட்ரஸ் கட்டத்தில் கொடுத்து என்டர் செய்திட குறிப்பிட்ட தளத்தில் தரப்பட்டுள்ள சொற்கள் தேடிக் காட்டப்படும்.
2. பல தளங்களுடன் திறப்பு: வழக்கமாக நாம் அடிக்கடி கட்டாயமாக முதல் தளமாகப் பார்க்க விரும்பும் இணைய தளத்தினை நம் ஹோம் பேஜாக வைத்திருப்போம்.
உங்களுக்கு இன்னும் சில தளங்களும், பிரவுசர் திறந்திடும் போதே தேவை எனில் என்ன செய்வீர்கள்? பயர்பொக்ஸ் அதற்கான வழியினைக் கொண்டுள்ளது.
பிரவுசரை இயக்கி Options > General எனச் செல்லவும். பின்னர் ஹோம் பேஜ்(home page) பீல்டில் நீங்கள் ஒரே நேரத்தில் திறக்கப்பட வேண்டிய தளங்களின் முகவரிகளை டைப் செய்திடவும். ஒரு முகவரிக்கும் மற்றொன்றுக்கும் இடையே பைப் அடையாளம் டைப் செய்திடவும்.
3. ஆர்.எஸ்.எஸ். மேம்படுத்துதல்: நீங்கள் அடிக்கடி இணையதளம் ஒன்றைப் பார்வையிடுபவராக இருந்தால் குறிப்பாக செய்திகளுக்கான தளமாக இருந்தால் இதற்கான ஒரு புக்மார்க் தயார் செய்து அது தானாக செய்திகளை அப்டேட் செய்திடும் வகையில் அமைக்கலாம்.
பயர்பொக்ஸ் டூல்பாரில் ரைட் கிளிக் செய்திடவும். "Customize" என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் அந்த ஆர்.எஸ்.எஸ்.லோகோவின் மீது அழுத்தியவாறே இழுத்து வந்து டூல்பாரில் விடவும். இப்போது எந்த தளத்திலிருந்து செய்திகள் கிடைக்க விரும்புகிறீர்களோ, அங்கு செல்லவும். பின்னர் டூல்பாரில் உள்ள பட்டனை கிளிக் செய்திடவும்.
இதில் புக்மார்க் செய்த பெயரை என்டர் செய்திடவும். பின்னர் Add என்பதில் கிளிக் செய்திடவும். இனி செய்திகள் தாமாக அப்டேட் செய்யப்பட்டு உங்களுக்குக் கிடைக்கும்.
4. விரல் நுனியில் செட்டிங்ஸ்: இணைய உலாவிற்குத் தாங்கள் பயன்படுத்தும் பிரவுசர்களில் அனைவரும் நமக்கான செட்டிங்ஸ் சிலவற்றை ஏற்படுத்தியிருப்போம். இதனால் மற்ற கணணிகளில் பிரவுஸ் செய்திடுகையில் தடுமாற்றம் ஏற்படலாம். புக்மார்க்குகள் இருக்காது; சில தீம் செட்டிங்ஸ் கிடைக்காது.
பயர்பொக்ஸ் இதற்கான வழி ஒன்றைத் தருகிறது. இந்த பிரவுசர் செட்டிங்ஸ்களுடன் பயர்பொக்ஸ் பிரவுசரை, ஒரு யு.எஸ்.பி. பிளாஷ்ட்ரைவில் பதிந்து கொள்ளலாம். அந்த ட்ரைவினை புதிய கணணியில் இணைத்து இயக்கலாம். எந்த பிரச்னையுமின்றி வேகமாக பிரவுஸ் செய்திட இது உதவும்.
5. கீபோர்ட் ஷார்ட்கட் தொகுப்புகள்: பயர்பொக்ஸ் பிரவுசர் அனைத்து செயல்பாடுகளுக்கும் ஷார்ட்கட் கீ தொகுப்புகளை அனுமதிக்கிறது. இந்த ஷார்ட்கட் கீ தொகுப்புகள் அனைத்தும் முழுமையாக http://support.mozilla.com/en-US/kb/Keyboard%20shortcuts?s=keyboard+shortcuts&r=0&as=s என்ற முகவரியில் மொஸில்லா தந்துள்ளது. இவற்றைப் பதிந்து வைத்துப் படித்துப் பார்த்து பயன்படுத்தவும்.
கணணியில் எவ்வளவு நேரம் பணிபுரிந்தோம் என்பதனை அறிந்து கொள்வதற்கு
அதுமட்டும் அல்லாமல் எந்த எந்த அப்ளிகேஷனில் எவ்வளவு நேரம் பணிபுரிந்தோம் என்பதனையும் துல்லியமான நேரம் முதற்கொண்டு அறிந்து கொள்ளலாம்.
6 எம்.பி.கொள்ளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்து கொள்ளவும். நீங்கள் இதனை நிறுவியதும் ஒரு விண்டோ ஓப்பன் ஆகும். இதில் கணணி யூசேஜ் பச்சை நீறத்தில் வந்து விடும். சிகப்பு நிறம் கணணி உபயோகம் இல்லாத நேரத்தினை குறிக்கும்.
நீங்கள் எந்த எந்த அப்ளிகேஷன்களை எவ்வளவு நேரம் உபயோகித்தீர்கள் என இதில் உள்ள சார்ட் வைத்து எளிதில் அறிந்து கொள்ளலாம். எந்த எந்த அப்ளிகேஷனை நீங்கள் திறந்து பார்த்தீர்கள் என அறிந்து கொள்ளலாம்.
இதில் நேரத்தினையும் செட் செய்து விடலாம். இது தவிர அன்றைய பொழுதில் நீங்கள் எவ்வளவு நேரம் கணணியில் பணிபுரிந்தீர்கள் என்பதனையும் அறிந்து கொள்ளலாம்.
நீங்கள் அப்ளிகேஷன் டேபில் கர்சரை கொண்டு செல்ல எந்த இடத்தில் நீங்கள் எந்த அப்ளிகேஷனை பயன்படுத்தினீர்கள் என்கின்ற விவரம் தெரியும்.
தரவிறக்க சுட்டி
Saturday, 10 September 2011
இணைய இணைப்பு இல்லாமல் ஜிமெயிலை பயன்படுத்துவதற்கு
கூகுளின் ஜிமெயிலை அனைவரும் உபயோகிக்கிறோம் நாளுக்கு நாள் புது புது வசதிகளை அறிமுகபடுத்துவதால் அனைவரும் ஜிமெயிலை பயன்படுத்துகிறோம். அதில் ஏதாவது ஒரு நேரத்தில் நமக்கு ஏதேனும் முக்கியமான மின்னஞ்சல் வந்துள்ளதா என சோதிக்க வேண்டும் அல்லது யாருக்கேனும் முக்கிமாக ஒரு மின்னஞ்சல் அனுப்ப வேண்டும் சரியாக அந்த நேரம் பார்த்து நம்முடைய கணணியில் இணைய இணைப்பு துண்டிக்கபட்டிருக்கும் அல்லது நாம் வேறு எங்காவது வெளியில் இருப்போம் மடிக்கணணியில் இணைய இணைப்பு இருக்காது. அது போன்ற சமயங்களில் நமக்கு உதவி செய்யவே கூகுள் ஒரு அருமையான வசதியை வெளியிட்டுள்ளது.
ஓப்லைனில் நம்முடைய ஜிமெயிலுக்கு வந்துள்ள மின்னஞ்சலை பார்க்கலாம் மற்றும் நாம் மற்றவர்களுக்கும் மின்னஞ்சல் அனுப்பலாம் மற்றும் ஓன்லைனில் செய்யும் அனைத்து வேலைகளையும் நாம் இன்டர்நெட் கனெக்சன் இல்லாமலே செய்யலாம். இதற்கு நீங்கள் கூகுள் குரோம் உலவியை பயன்படுத்த வேண்டும்.
அடுத்து இந்த லிங்கில் Offline Google Mail சென்று நீட்சியை உங்கள் உலவியில் இன்ஸ்டால் செய்யுங்கள். இந்த நீட்சியை உங்கள் உலவியில் இணைத்தவுடன் ஒரு புதிய டேப்(tab) உருவாகும் அல்லது நீங்களே ஒரு New tab உருவாக்குங்கள். இப்பொழுது புதிய டேபில் நீங்கள் தற்பொழுது இணைத்த Offline Google Mail ஐகானும் இருக்கும் அதில் கிளிக் செய்யுங்கள். உங்களுக்கு இன்னொரு விண்டோ ஓபன் ஆகும் அதில் Allow Offline Mail என்பதை தேர்வு செய்யவும்.
இந்த விண்டோவில் கீழே பகுதியில் உங்களின் மின்னஞ்சல் ஐடி காட்டும் அதில் எந்த ஐடிக்கு நீங்கள் ஓப்லைனில் பார்க்க வேண்டுமோ அதை தேர்வு செய்து கொண்டு Continue பட்டனை அழுத்துங்கள். அவ்வளவு தான் Continue அழுத்தியவுடன் உங்களின் மின்னஞ்சல் திறக்கும் அந்த ஐடிக்கு வந்த அனைத்து மின்னஞ்சல்களும் காட்டும். இதில் உங்கள் இன்பாக்ஸில் உள்ள அனைத்து மின்னஞ்சல்களும் காட்டும்.
அந்த மின்னஞ்சலுக்கு நீங்கள் Reply போடலாம், அல்லது அந்த மின்னஞ்சலை அப்படியே Forward செய்யலாம் அல்லது புதியதாக நீங்களே ஒரு மின்னஞ்சலை Compose பட்டனை அழுத்தி அனுப்பலாம் மற்றும் ஏதாவது ஒரு பைலை attachment செய்து அனுப்பும் வசதியும் உள்ளது அனைத்தும் இணைய இணைப்பு இல்லாமலே.
மேலும் ஓன்லைனில் உள்ள Move, Label, Mute, Report Spam,Print, Mark as Read போன்ற இதர முக்கியமான வசதிகளும் நீங்கள் ஓப்லைனில் பயன்படுத்தி கொள்ளுங்கள். மேலும் Menu பட்டனை அழுத்தினால் இன்னும் பல வசதிகள் உள்ளது. இதன் மூலம் Chat History கூட பார்த்து கொள்ளலாம் என்பது கூடுதல் சிறப்பு. இவ்வாறு ஒட்டுமொத்த வசதிகளையும் நாம் இணைய இணைப்பு இல்லாமேலே பயன்படுத்தி கொள்ளலாம்.
Monday, 29 August 2011
இணையதளங்களை கண்காணிக்க ஒரு இணையதளம்.
இன்டெர்நெட்டை திரும்பி பார்க்க உதவும் வேபேக் மெஷின் பற்றி நீங்கள் அறிந்திருக்கலாம்.இணையதளங்களின் கடந்த கால தோற்றங்களை சேமித்து வைக்கும் இந்த தளத்தை இணையத்தின் கால் இயந்திரம் என்றும் சொல்கின்றனர்.
ஒரு இணையதளம் குறிப்பிட்ட காலத்திற்கு முன் எப்படி இருந்தது என்று அறிய விரும்பினால் இந்த இயந்திரத்தின் மூலம் காலத்தில் பின்னோக்கி சென்று அந்த தளத்தின் அப்போதைய தோற்றத்தை பார்க்க முடியும்.
இந்த தளத்தை எத்தனை பேருக்கு தெரியும் என்று தெரியவில்லை.ஆனால் புதிதாக அறிமுகமாகியிருக்கும் டெய்லி ஸ்கிரீன்ஷாட் தளத்தை பார்க்கும் போது இந்த தளமே நினைவுக்கு வருகிறது.
டெய்லி ஸ்கிரீன்ஷாட் இணையதளம் குறிப்பிட்ட இணையதளங்களின் தோற்றத்தை பின் தொடர உதவுகிறது. அதாவது அந்த தளத்தை தினந்தோறும் கண்காணிக்க வழி செய்கிறது.
எந்த தளத்தை பின் தொடர விருப்பமோ அந்த தளத்தின் முகவரியை சமர்பித்தால் இந்த தளமானது அந்த தளத்தின் தோற்றத்தை தினந்தோறும் படம் பிடித்து காட்டுகிறது.இணையதள தோற்றத்தை அப்படியே படம் பிடித்து ஸ்கிரின் ஷாட்டாக பார்க்கலாம் அல்லாவா,அதே போலவே தளங்களின் ஸ்கிரின் ஷாட்டை சேமித்து வைக்கிறது இந்த தளம்.
இதன் மூலம் எந்த ஒரு இணையதளத்தில் ஏற்படும் மாற்றத்தையும் கண்காணித்து கொண்டே இருக்கலாம்.
இந்த சேவையை பலவிதங்களில் பயன்படுத்தலாம்.சொந்தமாக இணையதளம் வைத்திருப்பவர்கள் தங்கள் தளங்களின் பரிணாம வளர்ச்சியை இதன் மூலம் பின் தொடரலாம்.இணைய தள வடிவமைப்பாளர்களும் தாங்கள் உருவாக்கிய தளங்களின் செய்லபாட்டை அறிய இதனை பயன்படுத்தலாம்.
வர்த்தக நிறுவனங்கள் போட்டி நிறுவங்களின் தளங்கள் மீது ஒரு கண் வைத்திருக்கவும் இதனை பயன்படுத்தலாம்.
இணையவாசிகளும் தங்கள் அபிமான தளங்களின் தோற்றத்தை தினமும் கண்காணிக்கலாம்.ஆனால் கட்டண சேவை என்பதை மட்டும் நினைவில் கொள்ள வேண்டும்.
இணையதள முகவரி;http://dailyscreenshot.com/
Sunday, 28 August 2011
ரகசியமாக இமெயில் அனுப்ப ஒரு இணையதளம்
அதாவது நீங்கள் அனுப்பும் இமெயில் செய்தியை தாக்காளர் யாராவது இடைமறித்து படித்து விடக்கூடும் என்ற அச்சம் இருந்தால் இமெயில் வாசகங்களை யாரும் படித்து விட முடியாத வகையில் ரகசியமாக அனுப்பி வைக்க நினைத்தால் பிரைவ் நோட் இணையதளம் அதற்காகவே காத்திருக்கிறது.
இந்த தளத்தில் ரகசியமாக அனுப்ப வேண்டிய தகவலை டைப் செய்தால் அதற்கான இணைய முகவரி ஒன்றை தருகிறது.யாருக்கு இமெயில் சென்று சேர வேண்டுமோ அவருக்கு இந்த இணைய முகவரியை மட்டும் அனுப்பி வைக்கலாம்.இமெயில் அழியே அல்லது மெசேஜிங் மூலம் இந்த ரகசிய குறியீட்டு முகவரியை அனுப்பலாம்.
இதனை பெறுபவர் மட்டுமே அதனை கிளிக் செய்து படிக்க முடியும்.அவரும் கூட ஒரே ஒரு முறை தான் இந்த செய்தியை படிக்க முடியும்.காரணம் அவர் படித்து முடித்தபிரகு இந்த செய்தி காணாமல் போய்விடும்.அதாவது தன்னை தானே அழித்து கொண்டுவிடும்.
எனவே யாருக்கு அனுப்ப பட்டதோ அவரை தவிர யாரும் இந்த செய்திய படித்துவிட முடியாது.
இந்த அளவுக்கு மிகவும் ரகசியமான இமெயில் அனுப்பும் அவசியம் ஏற்படுகிறதோ இல்லையோ இப்படி படித்தவுடன் மறைந்துவிடும் இமெயில் சேவையை சுவாரஸ்யம் கருதி பயன்படுத்தலாம்.
Saturday, 27 August 2011
இமெயிலுக்கு நிரந்ததர முகமுடி.
உணமையான இமெயில் முகவரியை மறைத்து அனுப்ப உதவும் ‘நாட் ஷேரிங் மை இன்போ’ சேவையை பார்க்கும் போது எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி எழுதிய நாடகத்தின் தலைப்பான போர்வை போர்த்திய உடல்கள் தான் நினைவிக்கு வருகிறது.காரணம் இந்த சேவை போவை போர்த்தியது போன்ற இமெயில் முகவரியை உருவாக்கி கொள்ள வழி செய்கிறது.
அதாவது உண்மையான இமெயில் முகவரி வெளிப்படையாக தெரியாமல் அதனை மறைக்கும் வகையில் பாதுகாப்பான முகவரியை இந்த தளம் உருவாக்கி தருகிறது.
இவ்வாறு இமெயிலின் அடையாளத்தை மறைக்க வேண்டிய அவசியத்தை இணையவாசிகளுக்கு விளக்க வேண்டியதில்லை.ஸ்பேம் என்று சொல்லப்படும் வீணான இமெயில் தொல்லையில் இருந்து தப்பிக்க வேண்டும் என்றால் ஒருவருடைய இமெயில் முகவரி இணைய கயவர்களின் கையில் சிக்காமல் இருக்க வேண்டும்.
இதற்கு நம்பகத்தனமை இல்லாத இடங்களில் இமெயில் முகவரியை தராமல் இருப்பதே சிறந்தது.ஆனால் சில நேரங்களில் தகவல்கலை பெற இமெயில் முகவரியை சமர்பிப்பதை தவிர வேறு வழியில்லை.
இது போன்ற நேரங்களில் சமர்பிப்பதற்காக என்றே தற்காலிக இமெயில் முகவரிகளை உருவாக்கி கொள்ளலாம் தான். எண்ணற்ற தளங்கள் இப்படி யூஸ் அண்டு துரோ வகை முகவரிகளை வழங்குகின்றன.
ஒரு முறை பயன்படுத்தக்கூடிய தளங்களுக்கு இந்த தற்காலிக முகவரிகள் ஒகே.ஆனால் தொடர்ச்சியாக தகவல்களை பெற நினைக்கும் போது நிரந்தரமான இமெயில் முகவரி தேவை.
இந்த இடத்தில் தான் இமெயில் முகவரி வெளிப்படையாக தெரியாமல் மறைத்து அனுப்பும் அவசியம் ஏற்படுகிறது.ஸ்கிர்.ம் சேவை இப்படி முகமுடியோடு இமெயிலை அனுப்ப உதவுகிறது.
இருப்பினும் இந்த சேவை இமெயில் முகவரிகளை அறுவடை செய்யும் பாட்களிடம் இருந்து தப்பிப்பதற்கானது.இமெயில் முகவரியை சமர்பிக்காமாலேயே இமெயில் மூலம் தொடர்பு கொள்ள விரும்பும் நிலையில் இவை உதவாது.
அதாவது சில நேரங்களில் அனேமதையமாக இமெயில் முகவரியை சமர்பிக்கும் நிலை ஏற்படலாம்.
உதாரணமாக கடன் சேவை தொடர்பான தகவலை பெற விரும்பும் போது உண்மையான இமெயில் முகவரியை சம்ர்பிக்க தயக்கம் ஏற்படலாம்.ஆனால் கடன் சேவை தொடர்பான தகவல்கள் இமெயில் மூலம் வரவேண்டும் என்று எதிர்பார்க்கலாம்.
இப்போது நாட் ஷேரிங் மை இன்போ தளத்திற்கு சென்று உங்கள் இமெயில் முகவரியை சமர்பித்தால் அது அதற்கு மாற்றாக இரு இணைய முகவரியை அளிக்கும்.இமெயில் முகவரி மறைக்கப்பட்ட அந்த முகவரியை நீங்கள் தேவையான இடத்தில் தைரியமாக சமர்பிக்கலாம்.
அதன் பிறகு இமெயில்கள் உங்கள் இன்பாக்சிற்கு பார்வேர்டு செய்யப்பட்டு விடும்.
இணையத்தில் உங்கள் அடையாலாம் தெரியாமல் தொடர்பு கொள்ளப்பட வேண்டும் என்று நினைக்கும் இடங்களில் இந்த மறைமுக இமெயில் சேவையை பயன்படுத்தி கொள்ளலாம்.
இணையதள முகவரி;
Friday, 26 August 2011
மகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்
தோற்றத்தில் துவங்கி வடிவமைப்பு வரை இந்த தளம் அழகானதாக காட்சி அளிக்கிறது. இதன் உள்ளடக்கமோ அதைவிட சிறப்பாக, எளிமையின் உறைவிடமாக திகழ்கிறது.
வறுமையின் நிறம் சிவப்பு என்று சொல்வதைப்போல, பெண்மையின் நிறம் பிங்க் என்று ஒரு கருத்தும் இருக்கிறது. அதற்கு ஏற்ப இந்த இணையதளம் பிங்க் நிற பின்னணியில் வரவேற்கிறது.
வறுமையின் நிறம் சிவப்பு என்று சொல்வதைப்போல, பெண்மையின் நிறம் பிங்க் என்று ஒரு கருத்தும் இருக்கிறது. அதற்கு ஏற்ப இந்த இணையதளம் பிங்க் நிற பின்னணியில் வரவேற்கிறது.
சுருக்கமான அறிமுகத்தைத் தவிர இந்த தளத்தில் அதிக விவரங்கள் கிடையாது. அறிமுகமும் மிக அழகாகவே இருக்கிறது.
வேலை எனும் வார்த்தைக்கு பதில் வேட்கை எனும் வார்த்தையே பிரதானமாக இந்த தளத்தில் இடம் பெற்றுள்ளது. ஒருவர் தனக்கு மிகவும் பிடித்த துறையில் வேலையைத் தேடிக் கொண்டால் அது இன்பமானதாகவும், விளையாட்டுத்தனம் மிக்கதாகவும் இருக்கும் என துவங்கும் அறிமுக உரை அத்தகைய வேட்கை மிக்க வேலைவாய்ப்பை இங்கே தேடிக் கொள்ளுங்கள் என்று வழிகாட்டுகிறது.
வேலை எனும் வார்த்தைக்கு பதில் வேட்கை எனும் வார்த்தையே பிரதானமாக இந்த தளத்தில் இடம் பெற்றுள்ளது. ஒருவர் தனக்கு மிகவும் பிடித்த துறையில் வேலையைத் தேடிக் கொண்டால் அது இன்பமானதாகவும், விளையாட்டுத்தனம் மிக்கதாகவும் இருக்கும் என துவங்கும் அறிமுக உரை அத்தகைய வேட்கை மிக்க வேலைவாய்ப்பை இங்கே தேடிக் கொள்ளுங்கள் என்று வழிகாட்டுகிறது.
உங்கள் வேட்கையை தொடர்வதன் மூலம் வாழ்க்கைக்கான வருமானத்தை தேடிக் கொள்ளவும் என்றும், உற்சாகம் அளிக்கிறது. வெறும் வேலை வாய்ப்பு தேடலுக்கானது மட்டுமல்ல. பெண்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்தி அதற்கேற்ற வேலைவாய்ப்பை தேடிக் கொள்வதற்கான மேடையாகவும் திகழ்வதாக, இந்த தளம் தன்னைப்பற்றி பெருமிதத்தோடு கூறிக்கொள்கிறது.
ஒரு விதத்தில் இந்த தளத்தின் சிறப்பு அம்சமும் இதுதான்.
வேலை தேடிக் கொண்டிருக்கும் பெண்கள் தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொள்வதற்கான களமாகவும் இந்த தளம் அமைகிறது.
ஒரு விதத்தில் இந்த தளத்தின் சிறப்பு அம்சமும் இதுதான்.
வேலை தேடிக் கொண்டிருக்கும் பெண்கள் தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொள்வதற்கான களமாகவும் இந்த தளம் அமைகிறது.
இதன் மூலம் ஏற்கனவே பணியில் உள்ள பெண்களின் கருத்துக்கள் மற்றும் வழிகாட்டுதலை புதியவர்கள் தர முடியும். அந்த வகையில் பெண்களுக்கான உலகளாவிய பகிர்வு தளமாக இதனை உருவாக்கிஇருப்பதாக கரிஷ்மா தாஸ்வனி கூறுகிறார்.
இவர் தான் இந்த தளத்தை உருவாக்கியவர். வர்த்தக நிறுவனம் ஒன்றில் உயர் பதவியில் இருந்த அவர், காலை முதல் மாலை வரை பார்க்கக்கூடிய வேலையில் தனக்கான சுதந்திரத்தையும், உற்சாகத்தையும் எதிர்பார்க்க முடியாது என்ற உணர்வோடு அந்த வேலையை உதறி தள்ளிவிட்டு பெண்களுக்கு வேலைவாய்ப்பில் வழிகாட்டும் இந்த இணைய தளத்தை உருவாக்கி இருக்கிறார்.
இவர் தான் இந்த தளத்தை உருவாக்கியவர். வர்த்தக நிறுவனம் ஒன்றில் உயர் பதவியில் இருந்த அவர், காலை முதல் மாலை வரை பார்க்கக்கூடிய வேலையில் தனக்கான சுதந்திரத்தையும், உற்சாகத்தையும் எதிர்பார்க்க முடியாது என்ற உணர்வோடு அந்த வேலையை உதறி தள்ளிவிட்டு பெண்களுக்கு வேலைவாய்ப்பில் வழிகாட்டும் இந்த இணைய தளத்தை உருவாக்கி இருக்கிறார்.
வேலைவாய்ப்பு தேடலில் பெண்களுக்கு வழிகாட்டுவதற்காக மிக எளிமையான வடிவமைப்போடு இந்த தளம் உருவாக்கப்பட்டுள்ளது.
முகப்பு பக்கத்தில் அறிமுக குறிப்புக்கு கீழே இரண்டே இரண்டு வட்டங்கள் இடம் பெற்றுள்ளன. ஒன்று, பயோடேட்டாவை சமர்ப்பிப்பதற்காக, மற்றொன்று வர்த்தக நிறுவனங்கள், வேலைவாய்ப்பை வெளியிடுவதற்காக.
இரண்டு பகுதியிலுமே குறைந்தபட்ச விவரங்களை சமர்ப்பித்தால் போதுமானது. பொதுவாக வேலைவாய்ப்பு தளங்களில் பார்க்கக்கூடியது போல அடுக்கடுக்கான கட்டங்களோ, கூடுதல் விவரங்களோ இல்லாமல் இந்த தளம் மிக எளிமையாக காட்சி அளிக்கிறது.
தளத்திற்கு வருகை தரும் பெண்கள் தங்களுக்குள் கருத்து பரிமாற்றத்தை செய்து கொள்வதே பிரதான நோக்கம் என்பதால் அதற்கு உதவும் வகையில் டிவிட்டர், பேஸ்புக் மற்றும் இமெயில் வாயிலாக தொடர்பு கொள்வதற்கான எளிய வழிகளும் இடம் பெற்றுள்ளன. எல்லா வற்றையும் ஒரே கிளிக்கில் சாதித்துக் கொள்ளலாம்.
————-
Sunday, 21 August 2011
கொடுப்பதற்கு ஒரு இணையதளம் இருந்தால்!
இந்த பிரிவில் முன்னோடியான பிரிசைக்கிள் வகையை சேர்ந்தது என்றாலும் யாகிட் மேலும் ஒரு கொடுக்கல் சேவை என்ற அலுப்பை ஏற்படுத்தாமல் இருக்கிறது.அதற்கு காரணம் எளிமை மற்றும் பயன்பாட்டுத்தன்மை.
இந்த தளம் செயல்படும் விதம் மிகவும் எளிதானது.கொடுக்க விரும்புகிறவர்கள் கொடு பகுதியில் தாங்கள் பெற விரும்பும் பொருள் பற்றி குறிப்பிட்டால் போதுமானது.பொருட்களை பெற விரும்புகிறவர்கள் தங்களுக்கு தேவையான பொருள் பட்டியலிடப்பட்டுள்ளதா என்று தேடி பார்த்து கொள்ளலாம்.
உலகலாவிய தளம் என்பதால் இணையவாசிகளின் இருப்பிட நகரத்தின் அருகாமையில் பட்டியலிடப்படுள்ள பொருட்களே காட்டப்படுகின்றன.எந்த எந்த நகரங்களில் இருந்து விஜயம் செய்கின்றனரோ அந்த நகரின் அருகாமையில் தரப்படும் பொருட்களை பெறலாம்.
இப்போது தான் துவக்கப்பட்டுள்ள தளம் என்பதால் பெரிய அளவில் பரிமாற்றங்கள் இல்லை.ஆனால் நம்க்கு பயன்படாதது யாருக்கேனும் பயன்படட்டும் என்னும் கருத்தின் அடிப்படையில் பிறருக்கு கொடுப்பதை உக்குவிக்கும் உயர்ந்த நோக்கம் கொண்ட தளம் என்பதால் இது பிரபலமானால் நன்றாக இருக்கும்.
அதிலும் 100 கோடிக்கும் மேல் மக்கள் வாழும் இந்திய திருநாட்டிலிருந்து ஒருவர் கூட இன்னும் உறுப்பினராகவில்லை.சென்னை நகரில் இருந்து நுழைந்தால் இன்னும் ஒரு சென்னைவாசி கூட பொருளை தருவதாக பட்டியலிடவில்லை.நீங்கள் ஆரம்பித்து வையுங்களேன் என்று அழைப்பு விடுக்கிறது இந்த தளம்.
இணையதள முகவரி;http://www.yaakit.com/items.html
Subscribe to:
Posts (Atom)