Monday, 8 August 2011

இலக்குகளை பகிர்ந்து கொள்ள இந்த இணையதளம்.


இலக்குகளை பகிர்ந்து கொள்வதற்கான இன்னொரு தளமான பக்கட்லிஸ்ட் .ஆர்ஜி தளத்தை குறிப்பிடலாம்.
இந்த தளம் இலக்குகளையும்,லட்சியங்களையும் வெளிப்படுத்தி, செய்து முடித்த பின் அந்த சாதனையை பகிர்ந்து கொள்ள உதவுகிறது.
வாழ்க்கை லட்சியம் எதுவாக இருந்தாலும் அதனை அடைய இந்த தளம் கைகொடுக்கிறது.அந்த வகையில் பார்த்தால் இலக்குகளுக்கான சமூக வலைப்பின்னல் தளமாக இது விளங்குகிறது.
எப்படியும் செய்ய வேண்டும் என்று பல விஷயங்கள் எல்லோர் மனதிலும் இருக்கும் அல்லவா.ஆனால் அவற்றை செய்து முடிக்கும் வேகமும்,உத்வேகமும் தான் எல்லோருக்கும் வந்துவிடுவதில்லை.
இயல்பான சோம்பல், சூழ்நிலை அமையாதது ,வாழ்க்கை சுமை,பொருளாதார தடைகள் என பல்வேறு காரணங்களினால் செய்ய நினைப்பவற்றை செய்து முடிக்கும் வாய்ப்பு இல்லாமலே போய்விடலாம்.இதனால் தான் ,நான் கூட சின்ன வயதில் எழுத்தாளராக வேண்டும் என்று நினைத்தேன்,ஆனால் இந்த வேலையில் வந்து மாட்டி கொண்டேன் என்றெல்லாம் புலம்ப நேர்கிறது.
இப்படி தான் பாடகராகும் பெரும் கணவோடு இசை திறமையை மனதிற்குள் வைத்து கொண்டு சாப்ட்வேர் நிபுணராகவோ மார்க்கெட்டிங் பிரதிநிதியாகவோ வாழ்க்கையை ஓட்ட வேண்டியிருக்கிறது.இதே போல தான் அழகிய மலைப்பகுதியில் எந்த கவலையும் இல்லாமல் இயற்கையை அனுபவித்து ரசிக்க வேண்டும் என்பது போன்ற ஆசைகளை கூட நிறைவேற்றி கொள்ளும் வழியில்லாமால் வாழ்க்கை சக்கரத்தில் சிக்கி கொண்டிருக்கிறோம்.
வாழ்க்கையில் ஒரு முறையாவது சுவிட்சர்லாந்துக்கு சென்றுவிட வேண்டும்,ஒலிம்பிக் போட்டியை நேரில் பார்த்துவிட வேண்டும் என்று எத்தனையோ விதமான ஆசை ஒவ்வொருக்கும் இருக்கலாம்.
இவற்றை எல்லாம் பட்டியலிட்டு பகிர்ந்து கொள்வதகான இடம் தான் ‘பக்கட்லிஸ்ட்’.
வாழ்க்கையில் அடைய நினைபவற்றை ,செய்ய வேண்டும் என்று நினைத்து கொண்டிருப்பவற்றை இந்த தளத்தில் பகிர்ந்து கொள்ளலாம்.ஒவொருவரும் தங்களுக்கான உறுப்பினர் பக்கத்தை உருவாக்கி கொண்டு அதில் தங்கள் இலக்குகளையும் லட்சியங்களையும் தெரிவிக்கலாம்.இந்த இலக்குகள எட்டப்பட்டு விட்டால் அவற்றை அடைந்த விதத்தை பகிர்ந்து கொள்ளலாம்.உறுப்பினர் பக்கத்தில் இடது பாதி இப்படி செய்ய நினைப்பவைக்கும் வலது பாதி செய்து முடித்த வெற்றி கதைகளுக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளன.
மற்ற உறுப்பினர்கள் பக்கத்திற்கும் விஜயம் செய்து அவர்களின் இலக்குகளையும் பார்வையிடலாம்.இப்படி சக உறுப்பினர்களின் இலக்குகளை தெரிந்து கொள்ளும் போது நமக்கும் ஒருவித ஊக்கம் பிறக்கும்.அதே போல நாமும் கருத்து தெரிவித்து அவர்களை ஊக்குவிக்கலாம்.
நெஞ்சம் முழுவதும் ஆசைகளையும் இலக்குகளையும் வைத்திருப்பவர்களும் இந்த தளத்தை பயன்படுத்தலாம்.எதை செய்வது எனத்தெரியாமல் விழிப்பவர்களும் இந்த தளத்தை பயன்படுத்தி மற்றவர்கள் மூலமாக வழிகாட்டுதல் பெறலாம்.
உறுப்பினர்களின் இலக்குகள் குறிச்சொல் படியும் வகைப்படுத்தப்பட்டுள்ளன.இலக்குகளுக்கான சமுக வலைப்பின்னல் தளம் என்பதால் சக உறுப்பினர்களை பின்தொடரலாம்.அபடி பின் தொடரும் போது அவர்களின் புதிய இலக்குகள் அல்லது சாதனைகளை உடனடியான தெரிந்து கொள்லலாம்.

நீங்களும் வானொலி அமைக்கலாம்.


எப் எம் வானொலி கேட்டு அலுத்து விட்டதா? எப் எம் வானொலியில் அலறும் நிகழ்ச்சி தொகுப்பாளர்களின் அர்த்தமில்லா பேச்சுக்களால் வெறுத்து ருக்கிறிர்களா?பாடல்களின் தேர்வில் அதிருப்தி இருக்கிற‌தா?
இல்லை.மடை திறந்த‌ வெள்ளம் போல பேசக்கூடிய ஆற்றல் இருக்கிறதா?உலகோடு பகிர்ந்து கொள்ள நல்ல விஷ‌யங்கள் உள்ளனவா?
ஆம் என்றால் நீங்களே ஏன் தனியாக ஒரு இணைய வானொலி ஆர்ம்பிக்க கூடாது?
ஆடியோ பிரியர்களுக்கான வானொலியாக ஏற்கனவே பாட்காஸ்டிங் இருப்பதை நீங்கள் அறிந்திருக்கலாம்.மேலும் வானொலி நிகழ்ச்சிகளை நடத்தி கொள்ள உதவும் இனைய சேவைகள் இருப்பதையும் நீங்கள் அறிந்திருக்கலாம்.
இந்த வரிசையில் புதிதாக நேர்ந்திருக்கிறது ஸ்பிரிக்கர் .
உலகோடு பேசுங்கள் என அழைக்கும் இந்த இணையதளம் உங்களுக்கான இணைய வானொலியை நடத்தி கொள்ள வழி செய்கிற‌து.அதிலும் எப்படி, இதோ இந்த நிமிடத்தில் இருந்து உடனடியாக் உங்கள் வானொலி சேவையை துவக்கி விடலாம்.
ஆம் பேசுவதற்கோ பகிர்ந்து கொள்வதற்கோ விஷயம் இருக்கிற‌து என்றால் இந்த தளத்தில் உறுப்பினராக உடனேயே உங்களுக்கான வானொலியை துவக்கி விடலாம்.
நேரடி ஒலிபரப்பு என்பார்களே அதே போல நீங்கள் பேச பேச நிகழ்ச்சி உங்கள் வானொலியில் ஒலிபர‌ப்பாகும்.இல்லை என்றால் அழகாக திட்டமிட்டு ஒரு நிகழ்ச்சியை தயார் செய்து இங்கு பகிர்ந்து கொள்ளலாம்.பதிவு செய்யவும் சிறப்பு சப்தங்களை சேர்க்கவும் வசதி உள்ளது.
நீங்கள் கேட்டு ரசித்த பாடல்கள்,நாட்டு நட்ப்புகல் மீதான விமர்சனம்,கிரிக்கெட் வர்னனை என்று எதை வேண்டுமானாலும் நீங்கள் பகிர்ந்து கொள்ளலாம்.
வானொலி நடத்தும் அளவுக்கு குரல் வளம் எல்லாம் இல்லை என்று நீங்கள் நினைத்தால்,மற்றவர்கள் வானொலியை கேட்டு பாருங்கள்.
உங்களை போன்ற உறுப்பினர்கள் உருவாக்கி வைத்திருக்கும் விதவிதமான வானொலி நிகழ்ச்சிகளை கேட்டு ர‌சிக்கலாம்.நிறுவனங்களால் நடத்தப்படும் வணிக ரீதியிலான வானொலி நிகழ்ச்சிகளை விட இவை மாறுபட்டதாக இருக்கும்.
உறுப்பினர்களீன் நிழ்ச்சிகள் அவற்றின் வகைகளுக்கேற்ப தனிதனியே வகைப்டுத்தப்பட்டுள்ளன.நீங்கள் விரும்பும் பிரிவை தேர்வு செய்து கேட்கலாம்.
சொந்தமாக வானொலியை நடத்துபவர்கள் தங்களுக்கான நேயர்களை தேடி கொள்ளும் வசதியும் இந்த தளத்தில் இருக்கிற‌து.வானொலியை உருவாக்கிய பிறகு அதனை பேஸ்புக மற்றும் டிவிட்டர் வழியே நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.அதே போல் நிகழ்ச்சியின் வகைகளை அதற்கேற்ற சொற்கள் மூலம் வகைப்படுத்தலாம்.
வனொலியை நடத்துபவர்களுக்கான தனி பக்கமும் தரப்படுகிரது.அதில் உறுப்பினர்கள் ஒருவரை ஒருவர் பின்தொடரெலாம்.
இணையம் ஏற்படுத்தி தந்துள்ள எல்லையில்லா வாய்ப்பின் அடையாளமாக இணையவாசிகள் தங்களுக்கான வானொலி நிலையத்தை நடத்தி கொள்ள உதவுகிற‌து இந்த தளம்.
இணையதள முகவரி