Monday, 8 August 2011

இலக்குகளை பகிர்ந்து கொள்ள இந்த இணையதளம்.


இலக்குகளை பகிர்ந்து கொள்வதற்கான இன்னொரு தளமான பக்கட்லிஸ்ட் .ஆர்ஜி தளத்தை குறிப்பிடலாம்.
இந்த தளம் இலக்குகளையும்,லட்சியங்களையும் வெளிப்படுத்தி, செய்து முடித்த பின் அந்த சாதனையை பகிர்ந்து கொள்ள உதவுகிறது.
வாழ்க்கை லட்சியம் எதுவாக இருந்தாலும் அதனை அடைய இந்த தளம் கைகொடுக்கிறது.அந்த வகையில் பார்த்தால் இலக்குகளுக்கான சமூக வலைப்பின்னல் தளமாக இது விளங்குகிறது.
எப்படியும் செய்ய வேண்டும் என்று பல விஷயங்கள் எல்லோர் மனதிலும் இருக்கும் அல்லவா.ஆனால் அவற்றை செய்து முடிக்கும் வேகமும்,உத்வேகமும் தான் எல்லோருக்கும் வந்துவிடுவதில்லை.
இயல்பான சோம்பல், சூழ்நிலை அமையாதது ,வாழ்க்கை சுமை,பொருளாதார தடைகள் என பல்வேறு காரணங்களினால் செய்ய நினைப்பவற்றை செய்து முடிக்கும் வாய்ப்பு இல்லாமலே போய்விடலாம்.இதனால் தான் ,நான் கூட சின்ன வயதில் எழுத்தாளராக வேண்டும் என்று நினைத்தேன்,ஆனால் இந்த வேலையில் வந்து மாட்டி கொண்டேன் என்றெல்லாம் புலம்ப நேர்கிறது.
இப்படி தான் பாடகராகும் பெரும் கணவோடு இசை திறமையை மனதிற்குள் வைத்து கொண்டு சாப்ட்வேர் நிபுணராகவோ மார்க்கெட்டிங் பிரதிநிதியாகவோ வாழ்க்கையை ஓட்ட வேண்டியிருக்கிறது.இதே போல தான் அழகிய மலைப்பகுதியில் எந்த கவலையும் இல்லாமல் இயற்கையை அனுபவித்து ரசிக்க வேண்டும் என்பது போன்ற ஆசைகளை கூட நிறைவேற்றி கொள்ளும் வழியில்லாமால் வாழ்க்கை சக்கரத்தில் சிக்கி கொண்டிருக்கிறோம்.
வாழ்க்கையில் ஒரு முறையாவது சுவிட்சர்லாந்துக்கு சென்றுவிட வேண்டும்,ஒலிம்பிக் போட்டியை நேரில் பார்த்துவிட வேண்டும் என்று எத்தனையோ விதமான ஆசை ஒவ்வொருக்கும் இருக்கலாம்.
இவற்றை எல்லாம் பட்டியலிட்டு பகிர்ந்து கொள்வதகான இடம் தான் ‘பக்கட்லிஸ்ட்’.
வாழ்க்கையில் அடைய நினைபவற்றை ,செய்ய வேண்டும் என்று நினைத்து கொண்டிருப்பவற்றை இந்த தளத்தில் பகிர்ந்து கொள்ளலாம்.ஒவொருவரும் தங்களுக்கான உறுப்பினர் பக்கத்தை உருவாக்கி கொண்டு அதில் தங்கள் இலக்குகளையும் லட்சியங்களையும் தெரிவிக்கலாம்.இந்த இலக்குகள எட்டப்பட்டு விட்டால் அவற்றை அடைந்த விதத்தை பகிர்ந்து கொள்ளலாம்.உறுப்பினர் பக்கத்தில் இடது பாதி இப்படி செய்ய நினைப்பவைக்கும் வலது பாதி செய்து முடித்த வெற்றி கதைகளுக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளன.
மற்ற உறுப்பினர்கள் பக்கத்திற்கும் விஜயம் செய்து அவர்களின் இலக்குகளையும் பார்வையிடலாம்.இப்படி சக உறுப்பினர்களின் இலக்குகளை தெரிந்து கொள்ளும் போது நமக்கும் ஒருவித ஊக்கம் பிறக்கும்.அதே போல நாமும் கருத்து தெரிவித்து அவர்களை ஊக்குவிக்கலாம்.
நெஞ்சம் முழுவதும் ஆசைகளையும் இலக்குகளையும் வைத்திருப்பவர்களும் இந்த தளத்தை பயன்படுத்தலாம்.எதை செய்வது எனத்தெரியாமல் விழிப்பவர்களும் இந்த தளத்தை பயன்படுத்தி மற்றவர்கள் மூலமாக வழிகாட்டுதல் பெறலாம்.
உறுப்பினர்களின் இலக்குகள் குறிச்சொல் படியும் வகைப்படுத்தப்பட்டுள்ளன.இலக்குகளுக்கான சமுக வலைப்பின்னல் தளம் என்பதால் சக உறுப்பினர்களை பின்தொடரலாம்.அபடி பின் தொடரும் போது அவர்களின் புதிய இலக்குகள் அல்லது சாதனைகளை உடனடியான தெரிந்து கொள்லலாம்.

No comments:

Post a Comment