செல்போன் வைத்திருக்கும் எல்லோருக்குமே இருக்கும் பிரச்சனை தான் இது.அதாவது செல்லை எங்காவது மறந்து வைத்து விட்டு தேடுவது.சிலருக்கு இந்த சோதனை எப்போதாவது ஏற்படும் ,இன்னும் சிலரோ அடிக்கடி இப்படி போனை வைத்த இடம் தெரியாமல் திண்டாடுவார்கள்.
சோபா,மேஜை,கட்டில்,புத்தக அலமாரி,அலுவலக் பை என எல்லா இடங்களிலும் தேடிப்பார்த்த பின் கடைசியில் பேப்பருக்கு அடியில் செல்போன் சாதுவாக இருக்கும்.இது போன்ற அனுபவங்கள் எல்லோருக்குமே உண்டு.
பொதுவாக இப்படி செல்போனை வைத்த இடம் தெரியாமல் திணறும் போது சுலபமாக செய்யக்கூடியது வேறு ஒருவரின் செல்லில் இருந்து உங்கள் செல்போன் எண்ணுக்கு அழைப்பு விடுப்பது தான்.சிங்ங்கும் செல் ஓசையை கொண்டு போனின் இடத்தை கண்டு[இடித்து விடலாம்.
ஆனால் அருகே யாரும் இல்லாமல் தனியாக மாட்டிகொண்டு விட்டால் இந்த வழியும் கை கொடுக்காது.
இது போன்ற நேரங்களில் உதவுவதற்காக என்றே அமெரிக்காவின் டேவ் டாசன் என்பவர் ஒரு எளிமையான இணையதளத்தை அமைத்திருக்கிறார்.
போனை மறந்து வைத்து தேடுபவர்களுக்கு உதவ வேண்டும் என்ற நோக்கத்தில் மின்னல் வேகத்தில் இந்த தளத்தை உருவாக்கியதாக டாசன் தெரிவித்துள்ளார்.ஐ கான்ட் பைட் மை போன் இது தான் அந்த தளத்தின் பெயர்.
செல் எங்கே என்று தெரியாத போது இந்த தளத்தில் உங்கள் போன் எண்ணை சமர்பித்தால் இந்த தளம் உடனே உங்கள் எண்ணை அழைக்கும்.அப்படியே போனை கண்டுபிடித்து விடலாம்.எளிமையான ஆனால் பயனுள்ள சேவை
அமெரிக்காவை மையமாக கொண்ட சேவை என்றாலும் மற்ற நாடுகளின் குறியீட்டு எண்ணை சமர்பித்து பயன்படுத்தி கொள்ளும் வசதி இருக்கிறது.ஆனால் போன் கட்டண விவரங்கள் பற்றிய தகவல் தெரியவில்லை.
————
No comments:
Post a Comment