Tuesday, 5 July 2011

இன்று ஒரு பரிசு தருவோம்.;அழைக்கும் இணையதளம்.


முன்பின் தெரியாத ஒருவருக்கு பரிசளித்து மகிழ்ச்சியில் ஆழ்த்த வேண்டும் என்று எப்போதாவது நீங்கள் நினைத்ததுண்டா?ஆம் எனில் அதற்காக என்றே ஒரு இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கிப்ட் ஏ ஸ்டிரேஞ்சர் என்னும் அந்த தளம் அறிமுகமில்லாதவர்களுக்கு பரிசளித்து உலகம் முழுவதும் மகிழ்ச்சி அலையை பரவச்செய்ய உதவுகிறது.
இந்த தளம் செயல்படும் விதமும் சுவாரஸ்யமானது.யாரோ ஒருவருக்கு பரிசளித்து மகிழ்ச்சியை அளிக்க விரும்புகிறவர்கள் இந்த தளத்தில் உள்ள பரிசளிக்க பகுதியை கிளிக் செய்தால் உலகில் எங்கோ ஒரு மூளையில் உள்ள ஒருவரின் முகவரி திரையில் வந்து நிற்கிறது.கூகுலின் வரைபடத்தில் இந்த முகவரி இடம்பெறுகிறது.
அந்த முகவரியை அச்சிட்டு தபாலில் பரிசு பொருளை அனுப்பி வைக்கலாம்.இந்த தளம் உத்தேசமாக பரிந்துரைக்கும் முகவரியையும் தேர்வு செய்து கொள்ளலாம்.அல்லது வேறு முகவரியையும் கோரலாம்.
பர்சளிக்கப்பட்ட நபரின் முகவை வரைபடத்தில் நீல நிற வண்ண பலுனாக காட்டப்பட்டிருக்கும்.பரிசளிக்கும் முன் யார் யார் எந்த பரிசுகளை வழங்கியுள்ளனர் என்றும் பார்த்து கொள்ளலாம்.
அடுத்தவர்களை மகிழ வைப்பதே உண்மையான மகிழ்ச்சி என்று கருதுபவர்கள் இந்த தளத்தை நிச்சயம் விரும்புவார்கள்.
யோசித்து பாருங்கள்,ஏதோ ஒரிடத்தில் இருக்கும் ஒருவர் திடிரென தனக்கு ஒரு பரிசு பொருள் வந்திருப்பதை பார்த்தால் எப்படி மகிழ்ச்சி அடைவார் என்று?அத்தகைய மகிழ்ச்சியை வழங்குவோம்.பரிசளிப்பதன் ம்கிமையை பரவ செய்வோம்.
இணையதள முகவரி;http://www.giftastranger.net/

No comments:

Post a Comment