நியூயார்க், : பேஸ்புக் கணக்கில் இனி வீடியோ சாட்டிங் செய்யலாம். அதற்கான வசதியை இன்டர்நெட் போன் அழைப்பு சேவை நிறுவனமான ஸ்கைப்புடன் இணைந்து பேஸ்புக் அளிக்கிறது.சமூக இணைய தளங்கள் இப்போது மிகப் பிரபலம். உலகின் எந்த மூலை முடுக்கில் இருந்தாலும் இன்டர்நெட் வசதியுடன் கம்ப்யூட்டர், லேப்டாப், ஸ்மார்ட் போன் ஏதாவது ஒன்று இருந்தால் போதும். உலக விஷயங்களை உடனுக்குடன் சாட் செய்து பரிமாறி கொள்வோர் அதிகம். அதில் முன்னணி வகிக்கும் சமூக இணைப்பு இணைய தளம் பேஸ்புக். இதன் உறுப்பினர்கள் பல கோடி.விஐபிகள் முதல் விவசாயி வரை பலரும் இப்போது பேஸ்புக் கணக்கு வைத்து, தகவல்களை நண்பர்களுடன் புட்டு வைக்கின்றனர். ஒரு போட்டோ வை மட்டும் அப்லோட் செய்து விட்டு, டைப் செய்து தகவலை பரிமாறும் நடைமுறைதான் பேஸ்புக்கில் இதுவரை இருந்தது.
இனி, வீடியோ சாட்டிங்காக, எதிர்முனையில் சாட் செய்பவரை பார்த்தபடி தகவல் பரிமாறலாம். இதற்காக, முன்னணி இன்டர்நெட் வீடியோ அழைப்பு சேவை நிறுவனமான ஸ்கைப்புடன் பேஸ்புக் கூட்டு
சேர்ந்துள்ளது.இதுபற்றி பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸகர்பெர்க் கூறுகையில், ‘‘இது எங்கள் இணைய தளத்தின் பல கோடி உறுப்பினர்களுக்கு நாங்கள் அளித்துள்ள பரிசு. இதுவரை முகம் பார்க்காமல் நட்பு
வளர்த்தவர்கள் இனி, ஒருவரையொருவர் பார்த்தபடி சாட் செய்யலாம்’’ என்றார்.

No comments:
Post a Comment