Sunday, 21 August 2011

வரைதல் மூலம் நட்பு வளர்க்கும் இணையதளம்.


வரைதலில் ஆர்வம் இருந்து வரைந்த சித்திரங்களை பகிர்வதிலும் விருப்பம் இருந்தால் டூடுல்.லே இணையதளம் உங்களை நிச்சயம் கவரக்கூடும்.வரைதலில் எல்லாம் திற‌மை கிடையாது ஆனால் அழகான சித்திரங்களை பார்த்து ரசிக்க ஆசை என்று நினைத்தாலும் இந்த தளம் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தக்கூடும்.
இந்த தளத்தை இணைய சித்திர பலகை என்று சொல்லலாம்.வரைவதில் ஆர்வம் உள்ளவர்களுக்கு இந்த தளம் பலகையையும் தந்து வரைவதற்கான தூரிகையையும் தருகிறது.வண்ணங்களையும் தான்.
வரையவும் என்னும் பகுதியில் கிளிக் செய்தால் இந்த பலகையும் தூரிகையும் வருகின்றன.அதன் பிற‌கு விருப்பம் போன்ற சித்திரத்தை வரைய வேண்டியது தான்.வரைவது என்ற‌வுடன் ரவிவர்மா போலோ ஹுசேன் போலோ இருக்க வேண்டும் என்றில்லை.உங்கள் மனதில் உள்ள எண்ணத்தை உங்கள் திற‌மைக்கேற்ப கோட்டோவியம் போல வரையலாம்.
வரைந்து முடித்தவுடன் அதனை சேமித்து ஒரு தலைப்பிட்டு சம்ர்பிக்கலாம்.இவ்வாறு சமர்பிக்கப்படும் சித்திரங்கள் முகப்பு பக்கத்தில் இடம்பெறுகின்றன.உங்கள் சித்திரமும் அதில் சேர்க்கப்படும்.
இநத் சித்திரங்களை பார்த்து ரசிப்பதோடு அவை பிடித்திருந்தால் படித்திருக்கிறது என தெரிவிக்க‌லாம்.(பேஸ்புக் லைக் வசதி).நண்பர்கள் வட்டத்திலும் இதனை பகிர்ந்து கொள்ளலாம்.நண்பர்கள் ரசித்த சித்திரங்களையும் பார்த்து ரசிக்கலாம்.
கம்ப்யூட்டரிலும் இணையத்திலும் வரைவதற்கான வசதி இருக்கிறது என்றாலும் இந்த தளம் எளிதான இணைய சித்திர பலகையை வழங்குகிறது.அதனை ப‌யன்ப‌டுத்துவதும் சித்திரத்தை சேமித்து வைப்பதும் எளிதாக உள்ளது.
நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளும் வசதி இதனை மேலும் சுவாரஸ்யமாக்குகிறது.
இங்கு சம‌ர்பிக்கப்படு சித்திரங்களை பார்த்து ரசிப்பதும் சுவாரஸ்யமானது. சில கிறுக்கலாக இருந்தாலும் சில எளிமையான ஆனால் அழகான க‌ருத்தை முன்வைக்கின்றன.
இணையத்தில் பகிர்தல் சார்ந்த சேவைகள் பிரபலமாக உள்ள சூழலில் வரைதல் மூலம் நட்பு வளர்க்கும் இந்த தளம் சுவாரஸ்யமான‌து.
ஆனால் பெரிய அளவில் கருத்து பரிமாற்றதில் எல்லாம் ஈடுபட முடியாது.அதே நேரத்தில் விளம்பர‌ நோக்கிலான சித்திரங்க‌ளையோ ஆபாச சித்திரங்களையோ சமர்பிக்க கூடாது.
படைப்பு திறன் சார்ந்த சித்திரங்களுக்கு மட்டுமே அனுமதி உண்டு.வரையவும் வழி செய்து அதனை வெளியிடவும் வழி செய்து பகிரவும் வழி செய்யும் இந்த தளம் வரைதலில் ஈடுபாடு கொண்டவர்களுக்கு பிடித்தமானதாகவே இருக்கும்.
இணையதள முகவரி;http://doodle.ly/
—————]
என்னோடு வரைய வாருங்கள்!
டூடுல் வால் தளம் எந்த அளவுக்கு ப‌யனுள்ளது என்று தெரியவில்லை.ஆனால் சுவாரஸ்யமனது.உலகோடு சேர்ந்து வரைவதற்கான இணைய சுவரை இந்த தளம் உருவாக்கி தருகிற‌து.
உறுப்பினராக பதிவு செய்து கொள்பவர்கள் தங்களுக்கான சுவரை பெற்று கொன்டு அதில் வரையத்துவங்க‌லாம்.பின்னர் அந்த சுவரை மற்றவர்களோடு பகிர்ந்து கொன்டு அவர்களையும் வரைய வைக்கலாம்.நண்பர்களை மட்டும் வரைய அனுமதிக்கலாம்.இல்லை அனைவரையும் வரைய‌ அனுமதிக்கலாம்.
ஏற்கனவே உருவாக்கப்பட்டு வரையப்பட்டு வரும் இணைய சுவர் சித்திரங்களையும் பார்த்து ரசிக்க‌லாம்.மொத்த சித்திரங்களின் எண்ணிக்கை,கடையாக வரையப்பட்ட சித்திரம் ,மொத்த நணபர்கள் போன்ற தகவல்களும் உள்ளன.சித்திரங்க‌ள் சார்ந்து உரையாடும் வசதியும் இருக்கிறது.
இணையதள முகவரி;http://doodlewall.com/
—————–
டட்லர்சை இந்த இரண்டும் இணைந்த சித்திர சேவை என்று சொல்லலாம்.
டட்லர்ஸ் மூலம் யார் வேண்டுமானாலும் சித்திரத்தை வரையலாம்.நண்பர்களையும் உடன் வரை அனுமதிக்க‌லாம்.வரைந்து முடித்த பின் சித்திரத்தை சம்ர்பிக்க‌லாம்.
சமர்பிக்கப்பட்ட பின் சித்திரத்தை பார்க்க முடியாது.அதாவது சித்திரத்தை மட்டும் பார்க்காமல் அது வரையப்பட்ட வித்ததை அப்படியே விடியோ காட்சியாக பார்க்கலாம்.அது தான் இந்த தளத்தின் சிறப்பம்சம்.
இப்படி சித்திர வீடியோவை பார்க்க விஷேச மென்பொருள் தேவை.
சித்திரங்களை உறுப்பினர்கள் பார்த்து ரசித்தவுடன் கருத்து தெரிவிக்கலாம்.வாக்களிக்கலாம்.வாக்குகளின் அடைப்படையில் சித்திரங்கள் முன்னிலைபடுத்த்ப்படும்.
முகப்பு பக்கத்தில் சித்திரங்க‌ள் வரிசையாக தொகுக்கப்பட்டுள்ளன.சித்திரங்களின் பொருளுக்கேற்ப குறிச்சொல் கொண்டும் வகைப்படுத்தப்பட்டுள்ளன.சித்திரங்களை தேடிப்பார்க்கும் வசதிட்யும் இருக்கிறது.
இணையதள முகவ‌ரி;http://www.dudlers.com/
————

No comments:

Post a Comment