இசைக்காக ஸ்பாட்டிபை செய்ததை இலக்கியத்திற்காக செய்ய வந்திருக்கிறது என்னும் வரணனையோடு அறிமுகமாகியிருக்கிறது 24 சிம்பல்ஸ் இணையதளம்.
இலக்கியத்திற்கான ஸ்பாட்டிபை என்றும் சொல்லப்படக்கூடிய இந்த தளம் ஸ்பாட்டிபை எப்படி பாடல்களை கேட்டு ரசிக்க உதவுகிறதோ அதே போல புத்தகங்களை படிக்க உதவுகிறது.
புத்தகங்களை படிக்க உதவும் இணையதளங்கள் ஏற்கனவே ஏராளமாக உள்ள நிலையில் இதில் என்ன புதுமை இருக்கிறது என கேட்கலாம்.இந்த தளத்தில் புத்தகங்களை டவுண்லோடு செய்யாமலேயே படிக்கலாம் என்பதே விஷயம்.
பொதுவாக இணையத்தில் புத்தகங்களை இபுக் வடிவிலோ அல்லது பிடிஎப் உள்ளிட்ட கோப்பு வடிவிலோ தான் படிக்க முடியும்.அநேகமாக அவற்றை டவுண்லோடு செய்து கொள்ள வேண்டும்.டவுண்லோடு செய்யாமல் புத்தகங்களை படிப்பது மிகவும் கடினம்.டவுண்லோடு செய்வது என்பது சில நேரங்களில் புத்தகங்களை வாங்குவதையும் குறிக்கும்.அதிலும் குறிப்பாக புதிய புத்தகங்கள் மற்றும் காப்புரிமை சிக்கல் உள்ள புத்தகங்களை அதற்குறிய கட்டணம் செலுத்தியே இபுக் வடிவில் பெற வேண்டும்.
இணையத்தில் இலவசமாக படிக்க கிடைப்பவை பெரும்பாலும் காப்புரிமையில் இருந்து விடுவிக்கப்பட்ட புத்தகங்களே.புதிய புத்தகங்கள் சுடச்சுட தேவை என்றால் வாங்குவதை தவிர வேறு வழியில்லை.
ஆனால் பெரும்பாலான பதிப்பாளர்கள் இன்னும் புதிய புத்தகங்களை இபுக் வடிவில் வெளியிட விருப்பம் இல்லாதவர்களாகவே இருக்கின்றனர்.இபுக் அச்சு வடிவிலான விறபனையை பாதிக்கும் என்றும் காசு கொடுக்க மனமில்லாத இலவச வாசிப்பை ஊக்குவிக்கும் என்ற அச்சமே இதற்கு காரணம்.அதோடு காப்புரிமை சிக்கலும் இருக்கிறது.
இசை துறையிலும் இந்த பிரச்சனை இருக்கிறது.சொல்லப்போனால் இசை துறையில் தயாரிப்பாளர்களுக்கும் ரசிகர்களுக்கும் இடையே பெரும் போரே நடந்தது.புதிய பாடல்களை சிடியில் வாங்குவதை விட இணையம் வழியே டவுண்லோடு செய்து கொண்டு தங்களுக்குள் பரிமாரிக்கொள்ளும் வழக்கம் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வந்ததால் விற்பனையும் வருவாயும் பாதிக்கப்பட்ட நிலையில் இசை தயாரிப்பு நிறுவனங்கள் அவர்கள் மிது காப்புரிமை போர் தொடுத்தது.அனுமதி இல்லாமல் பாடல்களை டவுண்லோடு செய்வது சட்ட விரோதமாக கருத்தப்பட்டு நடவடிக்கையும் எடுக்கப்பட்டன.
இந்த போர் இன்னமும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.டவுண்லோடு யுகம் இசை தயாரிப்பு நிறுவனங்களை இல்லாமல் செய்துவிடும் என்பதால் தொழில்நுட்பம் ரசிகர்களுக்கு திறந்து விட்ட வாயில்களுக்கு பூட்டு போடுவதில் மும்முரமாக இருக்கின்றன.
இதனிடையே ஐடியூன்ஸ் அறிமுகமானது.காப்புரிமை சிக்கல் இல்லாமல் புதிய பாடல்களை கட்டணத்திற்கு டவுண்லோடு செய்து கொள்ள ஆப்பிளின் இந்த சேவை வழி செய்தது.இதிலும் சிக்கல்கள் இல்லாமல் இல்லை.
இந்த நிலையில் தான் ஸ்வீடனில் இருந்து ஸ்பாட்டிபை உதயமானது.இந்த தளம் சந்தா அடிப்படையில் புதிய பாடல்களை டவுண்லோடு செய்யாமலேயே கேட்டு ரசிக்க வழி செய்தது.அதாவது இந்த தளம் பாடல்களை ஸ்டிடிமிங் முறையில் ஒலிபரப்பி கொண்டே இருக்கும்.உறுப்பினர்கள் அதனை இணையத்தில் கேட்டு மகிழலாம்.டவுண்லோடு செய்யவும் முடியாது.மற்றவர்களோடு பகிரவும் முடியாது.பாடல்களை கிளிக் செய்தால் அவரை ஒலிபரப்பாகும் .கேட்டு ரசிக்கலாம்.
காப்புரிமை உள்ள பாடல்களை கூட ஸ்பாட்டிபை அனுமதி பெற்று இந்த தளத்தில் வழங்குகிறது.ஆனால் அதனை கேட்டு ரசிக்க விளம்பரங்களை பொருத்து கொள்ள வேண்டும்.விளம்பரம் வேண்டாம் என்றால் கட்டண சேவைக்கு போக வேண்டும்.
ஸ்வீடனில் துவங்கி ஐரோப்பாவில் பிரபலமான இந்த சேவை சமீபத்தில் அமெரிக்காவிலும் அறிமுகமானது.
ஸ்பாட்டிபை போலவே 24 சிம்பல்ஸ் புத்தகங்களை ஸ்டிரிமிங் செயது இணையத்திலேயே படிக்க உதவுகிறது.புதிய புத்தகங்களை கூட இதன் முலம் இணையத்திலேயே படிக்கலாம்.டவுண்லோடு செய்து படிக்க முடியாது.இலவசமாக படிக்க வேண்டும் என்றால் விளம்பரங்கள் இடம் பெற்றிருக்கும் இல்லை என்றால் சிறப்பு கட்டண சேவையை பயன்படுத்தி கொள்ளலாம்.இபுக் சாதனங்களிலும் படிக்கும் வசதி உண்டு.
புதிய புத்தகங்களை விலை கொடுத்து வாங்க வேண்டிய தேவையில்லாமல் அதெ நேரத்தில் காப்புரிமை பிரச்ச்னை இல்லாமல் படிக்க இந்த சேவை மிகவும் ஏற்றது.புத்தக பிரியர்களுக்கு மிகவும் பயனுள்ளது.
இப்போதைக்கு ஸ்பானிஷ் மற்றும் ஆங்கில புத்தகங்கள் மட்டுமே கிடைக்கின்றன.அதிலும் ஸ்பானிஷ் மொழி புத்தகங்களே அதிகம் உள்ளன.விரையில் மற்ற மொழிகளும் சேரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தளத்தில் உள்ள மற்றொரு சிறப்பம்சம் புத்தகங்களை அப்படியே இணையத்தில் இருந்தபடியே படிப்பதோடு அவற்றை பேஸ்புக் வழியே நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளவும் செய்யலாம்.அதே போல நண்பர்கள் படித்து கொண்டிருக்கும் புத்தகத்தையும் பார்க்கலாம்.இன்னும் ஒரு படி மேலே சென்று புத்தகத்தில் நாம் படித்த பகுதியில் விமர்சன குறிப்புகளை எழுதி அதையும் பகிர்ந்து கொள்ளலாம்.
இணையதள முகவரி
No comments:
Post a Comment