Wednesday, 21 September 2011

பேஸ்புக் இறுதியாக அறிமுகப்படுத்தியிருக்கும் புதிய வசதி!


நாளுக்கு நாள் புதுப்புது அம்சங்களை அறிமுகப்படுத்தும் சமூக வலையமைப்பான facebook , தனது news feed எனும் செய்தியோடையில் real time updates எனும் நிஜ நேர மேம்படுத்தல் வசதியை இணைத்துள்ளது.

facebook இனால் கடந்த பத்து நாட்களுக்குள் அறிவிக்கப்பட்ட மூன்றாவது புதிய சேவை இதுவாகும். இதன்மூலம் இறுதியாக facebook ஐ உபயோகித்த நேரத்தை அறிந்துகொள்ள முடிவதுடன், பெரிய புகைப்படங்களையும் இணைக்க முடியும்.

இதனால் தொடர் பாவனையாளர்களுக்கு மிகவும் அண்மைய தகவல்கள் தானாகவே வழங்கப்படும் அதேவேளை குறைந்தளவு பாவனையாளர்களுக்கு தகவல் தொகுப்புகள் அடங்கிய பிறிதொரு பகுதி பார்வைக்கு கிட்டும். .

facebook இன் செய்தியோடை தினந்தோறும் 750 மில்லியன் அங்கத்தவர்களால் பார்வையிடப்படுகின்றது.

அதிகளவு புதிய விடயங்கள் தற்போது வெளியிடப்படுவதால் இதனை facebook இன் “அறிமுக காலம்” என வர்ணித்துள்ள அதன் நிறுவனர் Mark Zuckerberg இந்த புதிய மாற்றமானது தற்போது பாவனையிலுள்ள Top news மற்றும் Most Recent ஆகிய தேர்வுகளை ஒருங்கிணைக்கும் நோக்கத்தை கொண்டதென தெரிவித்துள்ளார்.

facebook தனது செய்தியோடையிலுள்ள பெரிய அளவிலான புகைப்படங்களை ஒன்றிணைத்து வலதுபக்க மேல்மூலையில் “ Ticker ” எனும் புதிய அம்சமொன்றையும் இணைக்கவுள்ளது.இதனால் தமது நண்பர்களின் செயற்பாடுகளை நேரடியாக அவதானிக்க முடியும்.

இந்த புதிய மாற்றங்களை தளத்தில் பார்வையிடமுடியுமென facebook பேச்சாளரொருவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment