Sunday, 3 July 2011
இன்றே இணையதளம் துவங்குவீர்
உங்கள் வலைமனைக்கான புதிய வீடு அழைக்கிறது .
இப்படி தான் வரவேற்கிறது பிரேவ்சைட்ஸ் இணையதளம்.
]வீடு கட்டுவது ரொம்ப சுலபம் என்று சொல்வது போல இந்த தளம் சொந்தமாக இணையதளத்தை உருவாக்கி கொள்வது மிக மிக சுலபம் என்று சொல்கிறது.
இணையதளத்தை அமைப்பதற்கு தேவையான கோடிங் எல்லாம் அறியாமலேயே நிமிடத்தில் உங்களுக்கென சொந்த தளத்தை உருவாக்கி கொள்ளலாம் என்கிறது இந்த தளம்.
இப்படி துணிச்சலாக உறுதிமொழி அளிப்பதாலோ என்னவோ வீரமிகு(பிரேவ்சைட்ஸ)தளங்கள் என பெயர் வைத்துள்ளனர் போலும்.
முன் போல இணையதளம் அமைப்பது கம்பசூத்திரம் இல்லாமல் இப்போது மிகவும் எளிதாகிவிட்டாலும் கூட இணைய சாமன்யர்களுக்கு ஒரு இணைஅய்தளத்தை தாங்களே உருவாக்கி கொள்வது என்பது கொஞ்சம் மிரட்சி அளிக்கலாம்.ஓரளவுக்கேனும் எச் டி எம் எல் போன்றவைம் குறித்த பரிட்சயம் இருந்தால் தான் இணையத்தில் உள்ள கருவிகளை கொண்டு இணையதளத்தை அமைப்பது சாத்தியம்.
இவையெலாம் தேவையேயில்லை,இணையதளம் தேவை என்ற விருப்பம் இருந்தால் போதும் புதிய தளத்தை உருவாக்கி கொள்ள வழி காட்டுகிறோம் என உற்சாகம் அளிக்கிறது பிரேவ்சைட்ஸ். வடிவமைப்பு போன்றவற்றையும் இந்த தளமே பார்த்து கொள்கிறது.
பிரவுசரிலிருந்தே தளத்தில் தகவல்களை இடம் பெற வைக்கும் வசதி,இமெயில் ,வலைப்பதிவு வசதி போன்றவரை உள்ளடக்கிய இணையதளத்தை உருவாக்கி கொள்ளலாம் என்று இந்த தளம் உறுதி அளிக்கிறது. தனி நபர்கள்,இசை கலைஞரகள்,வர்த்தக பிரிவினர் என் ஆனைத்து தரப்பினரும் தங்களுக்கு தேவையான தளத்தை உருவாக்கி கொள்ளலாம் என்கிறது.
உங்கள் தளத்தை இன்றே உருவாக்கி கொள்ளுங்கள் என்று அழைக்கும் இந்த தளம் அதை நிறைவேற்றி தருகிறது என்றாலும் ஒரு விஷயத்தை கவனத்தில் கொள்ள வேண்டும்.
பெரும்பாலான சேவைகளை போலவே இந்த தளமும் அடிப்படிஅயான தளத்தை மட்டுமே இலவசமாக உருவாகி கொள்ள உதவுகிறது.அந்த இலவச தளத்தில் இட வசதி மற்றும் கூடுதல் அம்சங்களும் குறைவு என்று தான் சொல்ல வேண்டும்.
மூழு வீச்சிலான இணையதளம் தேவை என்றால கட்டன சேவைக்கு தான் செல்ல வேண்டும்.ஆனால் எளிதானது விரைவானது என்பதை மறுப்பதற்கில்லை.
இணையதள முகவரி;
www.bravesites.com
வரைபட விவரங்களுக்கான தேடியந்திரம்.
ஆனால் கூகுலால் தேட முடியாத தகவல்கள் இணைய உலகில் இருக்கத்தான் செய்கின்றன.அவற்றை தேடித்தர தனியே பிரத்யேக தேடியந்திரங்கள் தேவைப்படத்தான் செய்கின்றன.
அந்த வகையில் இணைய கடலில் மறைந்து கிடக்கும் தகவல்களை தேடித்தரும் புதிய தேடியந்திரமாக ஜான்ரன் அறிமுகமாகியுள்ளது.மறைந்து கிடக்கும் தகவல்கள் என்றால் புள்ளி விவரங்கள்,வரைபட விவரங்கள் போன்றவை.அதாவது தரவுகள்.(டேட்டா)
இந்த தகவல்கள் கட்டங்களுக்குள்ளும் கோடுகளுக்குள்ளும்,வரைபடங்களுக்கு மத்தியிலும் பிடிஎப் வடிவிலும் எக்செல் கோப்புகளாகவும் அடைப்பட்டு கிடக்கின்றன.
இணைய உலகில் தேடும் கூகுலின் தேடல் சிலந்திகள் இணைய பக்கங்களில் உள்ள செய்திகளையும்,தகவல்களையும் எளிதாக திரட்டிவிடுகின்றன.இந்த தகவல்களை பகுப்பாய்வதிலும்,இணையவாசிகள் சொல்லும் குறிச்சொல்லுக்கு பொருத்தமான தகவல்களை பட்டியலிடுவதிலும் கூகுல் குறை சொல்ல முடியாத திறமையை பெற்றிருக்கிறது.பிங் போன்ற பிற தேடியந்திரங்களுக்கும் இது பொருந்தும்.
இவை பெரும்பாலும் எச் டி எம் எல் வடிவில் இருப்பவை.இவற்றுக்கு மாறாக பல பக்கங்கள் பிடிஎப் வடிவில் சேமித்து வைக்கப்பட்டிருக்கலாம்.பெரும்பாலும் புள்ளி விவரங்கள் மற்றும் வரைபடங்களுடன் கூடிய கட்டுரைகள் இப்படி பிடிஎப் கோப்புகளாக அமைகின்றன. இன்னும் சில பக்கங்கள் எக்செல் வடிவில் இருக்கின்றன.
வார்த்தைகளையும் வரிகளையும் தேடி கண்டுபிடிக்க பழக்கப்பட்ட தேடியந்திர சிலந்திகள் இவற்றை கோட்டை விட்டுவிடுகின்றன.எனவே இந்த தகவல்கள் தேடலில் அகப்படுவதில்லை.
பொதுவாக இணையவாசிகளுக்கு செய்திகள்,கட்டுரை போன்றவையே தேவைப்படுவதால் வரைபடங்கள் மற்றும் புள்ளிவிவரங்கள் போன்றவை விடுபடுவதை பொருட்படுத்துவதில்லை.ஆனால் ஆய்வு நோக்கில் தகவல்களை தேடுபவர்களுக்கு,கல்வியாளர்கள்,நிபுணர்கள் போன்றவர்களுக்கு இந்த தகவல்கள் பயனுள்ளவையாக இருக்கும்.
நிபுணர்கள் என்றில்லை சாமன்யர்களுக்கே கூட ஏதாவது ஒரு நேரத்தில் புள்ளிவிவரங்கள் தேவைப்படலாம்.
இது போன்ற நேரங்களில் கை கொடுப்பதற்காக என்றே ஜான்ரன் தேடியந்திரம் உருவாக்கப்பட்டுள்ளது.புள்ளிவிவரங்கள்,வரைபட தகவல்கள் உள்ளிட்ட தரவுகளுக்கான கூகுல் என்று தன்னை தானே வர்ணித்து கொள்ளும் இந்த தேடியந்திரம் அதை கச்சிதமாக நிறைவேற்றுகிறது.
எப்படி என்றால்,இந்த தளத்தில் எதை தேடினாலும் அந்த குறிச்சொல் தொடர்பான புள்ளிவிவர பக்கங்களை பட்டியலிட்டு காட்டுகிறது.அதாவது பிடிஎப் மற்றும் எக்செல் கோப்புகளாக உள்ள பக்கங்களை பட்டியலிடுகிறது.
கூகுலிலேயே கூட பிடிஎப் கோப்பு என்று தனியே குறிப்பிட்டு தேட முடியும் தான்.ஆனால் இது முழுமையானதல்ல.தவிர பிடிஎப் வடிவில் தகவல் இருப்பது உறுதியாக தெரிந்தால் மட்டுமே இது கைகொடுக்கும்.
ஜான்ரன் தரவுகள் எந்த வடிவில் இருந்தாலும் அவற்றை தேடி பட்டியலிட்டு விடுகிறது.அதற்கேற்ற வகையில் தரவுகளை உணரக்கூடிய தேடல் தொழில்நுட்பமும் அதன் வசம் இருப்பதாக சொல்லப்படுகிறது.
வழக்கமான தேடியந்திரம் போல ஒரு பக்கத்தில் வார்த்தைகளையும் புகைப்படங்களையும் தேட முற்படாமல் இது புகைப்படங்களை தேடி அவற்றில் வரைபடங்களும் அட்டவணையும் இருக்கின்றனவா என அலசி ஆராய்ந்து அதனடப்படையில் முடிவுகளை பட்டியலிடுவதால் புள்ளிவிவரங்கள் அடங்கிய பிடிஎப் கோப்பு போன்றவற்றை முழுமையாக பட்டியலிடுகிறது.
இந்த தேடியந்திரத்தில் எந்த குறிசொல்லை டைப் செய்தாலும் அவை தொடர்பான பிடிஎப் பக்கங்களே வந்து நிற்கின்றன.
முதல் முறையாக இந்த தேடியந்திரத்தை பயன்படுத்துபவர்களுக்கு வழிகாட்டும் வகையில் உதாரணமாக சில தேடல் பதங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
அந்த தேடல் பதங்களை கிளிக் செய்தால் அவை தொடர்பான புள்ளிவிவர பக்கங்கள் வந்து நிற்கின்றன.
உதாரணமாக இந்தியாவில் அந்நிய முதலீடு என்னும் பதத்தை கிளிக் செய்தால் முதலீடு தொடர்பான புள்ளிவிவரங்கள் அடங்கிய பிடிஎப் பக்கங்கள் தோன்றுகின்றன.
இதே போல ஆப்பிரிக்காவில் செல்போன் பயன்பாடு,சைக்கிள் விபத்துகள்,இங்கிலாந்தில் சாலை விபத்துகள்,பெட்ரோல் பயன்பாடு போன்ற பதங்களுக்கும் இத்தகைய முடிவுகளை பார்க்கலாம்.
முடிவுகளை பரிசிலிக்கும் போது அவற்றை கிளிக் செய்ய கூட வேண்டாம் இடது பக்கத்தில் உள்ள பிடிஎப் அடையாளத்தின் மீது மவுசை நகர்த்தினாலே அந்த பக்கத்தின் தோற்றம் தோன்றுகிறது.
தேடியந்திர முகவரி
சிங்கம் போன்ற தேடியந்திரம்.
21ம் நூற்றாண்டின் தேடலுக்கு வாருங்கள் என்று அழைக்கிறது தேடியந்திர உலகில் புதிய வரவான சர்ச் லயன்.தேடுவதற்கான புதிய வழியை காட்டுவதாகவும் இது பெருமிதம் கொள்கிறது.அப்படி என்ன புதிய வழி?இதுவரை அறிமுகமான தேடியந்திரங்கள் காட்டிடாத வழி என்று கேட்க நினைத்தால்?இந்த கேள்வியை தான் எதிர்பார்த்தோம் என்று ஆர்வத்தோடு என்று விரிவான விளக்கத்தை தருகிறது.
கடந்த பத்தாண்டுகளாக இணைய தேடல் என்பது ஒரே மாதிரியாக தான் இருக்கிறது,பத்தாண்டுகளுக்கு முன் இணையத்தில் தேடினால் தேடல் பட்டியல் வந்து நிற்கும் இப்போது தேடினாலும் தேடல் பட்டியல் வந்து நிற்கிறது, என் துவங்கும் அந்த விளக்கம் ,தேடலை 21 ம் நூற்றாண்டுக்கு கொண்டு செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றும், அதை தான் சர்ச் லய்ன் செய்வதகாவும் சொல்கிறது.
இதுவரை தேடியந்திரங்கள் அளித்திராத அம்சங்கள் மூலம் இதனை செய்வதாகவும் சொல்கிறது.
அப்படியென்ன அம்சங்கள்.
தேடலுடன் இணைந்த உலாவுதால் தான் முதல் அம்சம்.அதாவது தேடிக்கொண்டே இணையதளங்களையும் பார்வையிடுவது.
இப்போது என்ன செய்கிறோம்.கூகுலுக்கு செல்கிறோம் ;தேடுகிறோம்.தேடல் பட்டியலில் உள்ள ஒரு இணைப்பை கிளிக் செய்கிறோம்.வெளியே சென்றுவிடுகிறோம்.பின்னர் மீண்டும் கூகுல் பட்டியலுக்கு வருகிறோம்.மீண்டும் கிளிக் செய்து வேறு ஒரு தளத்திற்கு செல்கிறோம்.இப்படி ஒவ்வொரு முறையும் தேடல் பக்கத்தில் இருந்து வெளியே செல்வது தேவை தானா என்று சர்ச் லயன் கேட்கிறது.
இதை தவிர்ப்பதற்கான மாற்று வழியாக ஒவ்வொரு இணைப்பிற்கும் ஒரு டேபை பிரவுசருக்குள்ளேயே வரவைக்கலாம்.என்றாலும் ஒவ்வொன்றையும் தனியே கிளிக் செய்து பார்க்க வேண்டும்.
இப்படி அல்லாடுவதற்கு பதிலாக தேடல் பட்டியலில் விருப்பமான இணைப்பை தேர்வு செய்ததுமே அதை கிளிக்கினால் அதே பக்கத்தில் அந்த தளம் தோன்றும்படி செய்கிறது சர்ச் லயன்.இப்படி தோன்றும் தளம் ஆகையால் தேடல் பக்கத்தில் இருந்து வெளியேறாமலேயே அதில் உள்ள இணையதளத்தை பார்க்கலாம்.இப்படி தோன்றும் தளம் ஒரு சில தேடியந்திரங்களில் காணக்கூடிய முன்னோட்ட வசதி இல்லை.அளவில் சிறியதாக இருந்தாலும் முழு தேடியந்திரத்தையும் அதே பக்கத்தில் பார்க்கலாம்.இதே போல எத்தனை தளங்களை வேண்டுமானாலும் அதே பக்கத்தில் திறந்து கொண்டேயிருக்கலாம்.
இதை தான் தேடலில் ஈடுபட்டவாறே இணையத்திலும் உலாவுதல் என்று சர்ச லைன் குறிப்பிடுகிறது.மிகச்சிறிய அம்சம் தான்,ஆனால் தேடல் அனுபவத்தை மேம்படுத்தக்கூடியது.
இதை தான் தேடலில் ஈடுபட்டவாறே இணையத்திலும் உலாவுதல் என்று சர்ச லைன் குறிப்பிடுகிறது.மிகச்சிறிய அம்சம் தான்,ஆனால் தேடல் அனுபவத்தை மேம்படுத்தக்கூடியது.
இதே போல மற்ற தேடியந்திரங்களில் இணையதளங்களை பார்க்க வேண்டும் என்றால் தனியே தேட வேண்டும்.புகைப்படங்கள் அல்லது விடியோக்களை தனியே தேட வேண்டும்.ஆனால் சர்ச்லைனில் எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் ஒரே பக்கத்தில் தேடும் வசதி இருக்கிறது.இதை பல்நோக்கு பார்வை என்கிறது சர்ச் லயன்.
தேடும் போது கண்டுபிடித்த இணையதளங்களை அப்படியே சேமித்து வைத்து கொள்ளலாம்.எல்லா தளங்களையும் சேமித்து வைத்து கொள்வதால் மீண்டும் ஒருமுறை ஏற்கனவே பார்த்த தளங்களை பார்க்க விரும்பினால் திண்டாட வேண்டியிருக்காது.
தேடல் முடிவுகளை பேஸ்புக் அல்லது டிவிட்டர் மூலம் நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளலாம்.இமெயில் மூலமும் பகிர்ந்து கொள்ளலாம்.
இவற்றை தவிர இணையவாசிகள் தங்களே புதிய வகையையும் சேர்த்து கொள்ளலாம்.அதாவது புகைப்படம்,வீடியோ போன்ற வழக்கமான வகைகளோடு பிரத்தயேக வகையையும் தேவைக்கேற்ப சேர்த்து கொள்ளலாம்.
இந்த வசதிகளை எல்லாம் அளிப்பதாக பெருமைபட்டு கொள்கிறதே தவிர அதற்கென சொந்தமாக தேடல் தொழில்நுட்பம் கிடையாது.கூகுலின் தேடல் தொழிநுட்பத்தையே பயன்படுத்துகிறது.இணையவாசிகள் விரும்பினால் கூகுலுக்கு பதிலாக யாஹூ அல்லது பிங் தேடலை பயன்படுத்தி கொள்ளும் வசதியும் உண்டு.
ஆக கூகுலை அண்டிபிழைக்கும் ஒட்டுண்னி வகை தேடியந்திரங்களில் இதுவும் ஒன்று.ஆனால் கூகுலில் இல்லாத வகையில் தேடல் முடிவுகளை மேம்பட்ட முறையில் பெற வழி செய்கிறது.
சர்ச் லயன் மேலும் பல வசதிகளையும் எதிர் காலத்தில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.சொந்த தேடல் தொழில்நுட்பமும் உருவாக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கிறது.
சர்ச லயன் வழங்கும் மற்றொரு வசதி கர்ஜிக்கும் சிங்கம் உடப விருஇம்பிய பின்னணி காட்சியையும் தேர்வு செய்ய முடியும் என்பது தான்.
Saturday, 2 July 2011
கால் வெடிப்பு குணமாக வேண்டுமா?
தரையைச் சுத்தம் செய்யப் பயன்படும் சில சோப் ஆயிலில் உள்ள கெமிக்கல், கால்களில் பட்டால் ஒரு சிலருக்கு வெடிப்பு உண்டாகும். கடினமான செருப்பு அணிவதாலும் பாத வெடிப்புகள் வரும். சிலர் பாதங்களை சுத்தமாக வைத்து கொள்வது இல்லை.இதனாலும் பாத வெடிப்புகள் வரும்.அதை போக்க சில எளிய வழிகள் இதோ:
* ஒரு நாள் விட்டு ஒரு நாள் எலுமிச்சை பழ தோலால் பாதங்களை நன்றாக தேய்த்து கழுவ வேண்டும். இது வெடிப்பில் உள்ள அழுக்குகளை நீக்கி, பாதத்தை சுத்தமாக்கும் மேலும் கிருமிகளை ஒழிக்கும்.
* கடுகு எண்ணெயை தினமும் கால், கைகளில் தேய்த்து கழுவி வந்தால், சொரசொரப்பு தன்மை நீங்கி, மிருதுவாகும். முதல் நாள் பாத்திரம் தேய்க்கும் நாரில் தயிரை தொட்டு உள்ளங்காலில் தேய்க வேண்டும். மறுநாள் தண்ணீரில் கல் உப்பைப் போட்டு நாரில் தொட்டு தேயுங்கள். தொடர்ந்து இப்படி மாறி மாறி செய்து வர, பாதம் மெத்தென்று ஆகும்.
* வெந்தயக் கீரையை அரைத்து கை, கால்களில் அப்பி பின் தேய்த்து கழுவி வந்தாலும், முரட்டுத் தன்மை போய் கை, கால்கள் பளிச்சென்று மாறும்.
* மருதாணி பவுடருடன் டீத்தூள், தேங்காய் எண்ணெய் கலந்து கை, கால்களில் இட்டுக் கொள்வது மிகவும் நல்லது. இது வெடிப்பு மற்றும் சொர சொரப்பை நீக்கி உடலை குளிர்ச்சியாக்கி, பஞ்சு போன்று மென்மையாக்கும்.
* உருளைக்கிழங்கை காய வைத்து பவுடராக்கி பின் அதை தண்ணீரில் குழைத்து பூசி வந்தாலும், வெடிப்பினால் ஏற்பட்ட கருமை நீங்கி, பாதம் மிளிரும்.
Friday, 1 July 2011
Now's your chance to make some money with todays video. You're about to learn how you can perform 3 Card Monte for your friends and always win!
Really nifty 3 Card Monte trick
Of course this is for entertainment purposes ONLY and should not
be played for money, but it will fry the minds of those who see it.
Here's that link again:
Really nifty 3 Card Monte trick
So get out there and have a great time
Of course this is for entertainment purposes ONLY and should not
be played for money, but it will fry the minds of those who see it.
Here's that link again:
Really nifty 3 Card Monte trick
So get out there and have a great time
Did you blow anyone's mind yet? Hopefully you started performing the Ring Levitation and are amazing people left and right.
Todays video is called the Jumping Rubberband. You can view it
here:
You're gonna love this video
This is the perfect follow up (or lead in) to the Ring Levitation.
Again this is a very easy trick for you to perform and will only
take a few minutes to learn and perfect.
So go get a rubberband and click the link:
You're gonna love this video
Stay amazing!
here:
You're gonna love this video
This is the perfect follow up (or lead in) to the Ring Levitation.
Again this is a very easy trick for you to perform and will only
take a few minutes to learn and perfect.
So go get a rubberband and click the link:
You're gonna love this video
Stay amazing!
Quick Magic Trick video!
Super Cool Video #1
It's called the Ring Levitation and you cause someones ring to
levitate right before their very eyes.
You might be thinking that it's going to be hard to learn, but
don't worry it's actually a very easy trick to do and you
should be performing it within minutes of watching your video.
So go check out your first video:
Super Cool Video #1
It's called the Ring Levitation and you cause someones ring to
levitate right before their very eyes.
You might be thinking that it's going to be hard to learn, but
don't worry it's actually a very easy trick to do and you
should be performing it within minutes of watching your video.
So go check out your first video:
Super Cool Video #1
புகையை மறக்க ஒரு இணையதளம்
.
அன்பான மனைவி, அழகான காதலி, நேசமிகு நண்பன் என யாராவது வலியுறுத்திக் கொண்டிருந்தால் சிகரெட்டை விட வேண்டும் என்ற எண்ணத்தை நடைமுறைப்படுத்தும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால் இந்த அன்பு சங்கிலியையும் மீறி பலரும் புகைபிடித்துக் கொண்டேதான் இருக்கின்றனர்.
இப்படி புகை பிடிப்பதை விடமுடியாமல் தவிப்பவர்களுக்கு இப்போது இணையம் வழியே உதவி காத்திருக்கிறது. குவிட் ஜூஸ் என்னும் இணையதளம் சிகரெட் பிடிப்பவர்கள் அந்த பழக்கத்திலிருந்து விடுபட வழி காட்டுகிறது. அடி மேல் அடி வைத்தால் அம்மிக் கல்லும் நகரும் என்று சொல்வது உண்டல்லவா, அதே போல் இந்த தளமும் தினமும் புகை பிடிக்கும் பழக்கத்தை கைவிடுவதற்கு தூண்டுகோலாக விளங்கக்கூடிய தகவல்களை அனுப்பி வைக்கிறது.
அதாவது, புகை பழக்கம் எப்படி உயிர் கொல்லியாக மாறக்கூடும் என்பதை சுட்டிக்காட்டும் செய்திகள், புள்ளிவிவரங்கள், ஆய்வு தகவல்கள், மருத்துவர்களின் ஆலோசனைகள் போன்ற தகவல்களை தொடர்ச்சியாக அனுப்பிக் கொண்டே இருக்கிறது. இந்த தகவல்களோடு புகை பிடிப்பதில் இருந்து விடுபட உதவும் அக்கப்பூர்வமான குறிப்புகள் மற்றும் ஆலோசனைகளையும் அனுப்புகிறது.
இந்த சேவையை பயன்படுத்தி கொள்ள முன்வருபவர்கள் செல்போன் மூலம் அல்லது இமெயில் வாயிலாக இந்த தகவல்களை பெற்றுக் கொள்ளலாம். செல்போன்கள் என்றால் ஸ்மார்ட் போன்கள்தான் தேவை என்றில்லை. சாதாரண செல்போனே கூட போதுமானது. செல்தான் வேண்டும் என்றில்லை. லேண்ட் லைனில் கூட தகவல்களை பெறலாம். எஸ்எம்எஸ் வடிவில் அல்லது வாய்ஸ் மெயிலாகவும் பெறலாம்.
புகைப்பிடிப்பதால் ஏற்படக்கூடிய புதிய விளைவுகளை விளக்கும் தகவல்களை தொடர்ச்சியாக எஸ்எம்எஸ் வடிவில் பெறும்போது கையில் இருந்துகொண்டிருக்கும் சிகரெட்டை வீசி எறிந்துவிட தோன்றும் அல்லவா! அப்படி வீசிய பிறகு மறுநாள் அல்லது அதற்கு மறுநாள் மீண்டும் புகைப்பிடிக்கும் ஆர்வம் கட்டுக் கடங்காமல் ஏற்படும் போது மீண்டும் எஸ்எம்எஸ் வடிவில் எச்சரிக்கை தகவல் அல்லது ஆலோசனை குறிப்புகள் வந்து சேரும்போது, சிகரெட்டே வேண்டாம் என்று உறுதியாக இருக்க முடியும் அல்லவா.
குவிட் ஜூஸ் இணைய தளம் இதைத்தான் செய்ய முயல்கிறது. இந்த சேவை நிச்சயம் செயல்படக் கூடியதாக இருக்க வேண்டும். காரணம் இந்த இணைய தளத்தை அமைத்திருக்கும் ஜெர்மி வில்லியம்ஸ் எனும் அவரும் புகைப்பிடிக்கும் பழக்கத்தால் பாதிக்கப்பட்டவர் தான். இந்த இணைய தளத்தை உருவாக்கும் எண்ணும் ஏற்படுவது குறித்து அவர் சுவாரஸ்யமான கதை ஒன்றை கூறியிருக்கிறார்.
தினந்தோறும் சிகரெட்டை விட்டு விடுங்களேன் என்று கெஞ்சிக் கொண்டிருந்த அவரது மனைவி புகைப்பிடிப்பதன் தீமையை விளக்கக்கூடிய செய்திகள், கட்டுரைகள், ஆய்வறிக்கை அடங்கிய காகித கட்டுகளை கொண்டு வந்து அவர் முன் போட்டு இதை படித்தாவது திருந்த பாருங்கள் என்று கூறிச் சென்று விட்டார்.
அந்த காகிதங்களில் சிலவற்றை படித்த பார்த்த வில்லியம்ஸ் உண்மையிலேயே திகைத்துப் போனார். சிகரெட் எத்தனை பெரிய உயிர் கொல்லி என்பதை விளக்கும் அந்த கட்டுரைகள் அவரை யோசிக்க வைத்தது. ஆனால் அந்த கட்டுரைகள் ஏற்படுத்திய அச்சத்தை மீறி அவற்றை தொடர்ந்து படித்து முடிக்க இயலவில்லை.
மனச்சோர்வு காரணமாக அவற்றை தூக்கி வைத்துவிட்டு வேறு வேலை பார்க்கச் சென்று விட்டார். அப்பொழுது அவருக்கு ஒரு விஷயம் புரிந்தது. சிகரெட் பிடிப்பதற்கு எதிரான விஞ்ஞான பூர்வமான தகவல்களை தெரிந்துகொள்ளும் போது, சிகரெட்டை விட்டு விட வேண்டும் என்ற எண்ணம் உண்டாகிறது. ஆனால் இந்த தகவல்கள், மனதில் தோன்றிக்கொண்டே இருந்தால்தான்
அந்த எண்ணம் செயலாக்கம் பெறுவதற்கான வாய்ப்பு உண்டு. இருப்பினும் எல்லா கட்டுரைகளையும் படித்துப் பார்க்கும் பொறுமை இல்லையே என்ற விஷயம் அவருக்கு புரிந்தது. அதன் பிறகு மீண்டும் ஒரு முறை அவர் புகைப்பிடிப்பதை விட முயன்றபோது மற்றொரு முறை அந்த கட்டுரைகளை யெல்லாம் படித்துப் பார்க்க விரும்பினார். சோதனையாக அந்த காகித கட்டை எங்கோ தவற விட்டு விட்டார்.
அந்த எண்ணம் செயலாக்கம் பெறுவதற்கான வாய்ப்பு உண்டு. இருப்பினும் எல்லா கட்டுரைகளையும் படித்துப் பார்க்கும் பொறுமை இல்லையே என்ற விஷயம் அவருக்கு புரிந்தது. அதன் பிறகு மீண்டும் ஒரு முறை அவர் புகைப்பிடிப்பதை விட முயன்றபோது மற்றொரு முறை அந்த கட்டுரைகளை யெல்லாம் படித்துப் பார்க்க விரும்பினார். சோதனையாக அந்த காகித கட்டை எங்கோ தவற விட்டு விட்டார்.
அந்த நேரத்தில்தான் அவருக்கு இந்த கட்டுரை மற்றும் செய்திகளில் உள்ள தகவல்களையெல்லாம் சுருக்கமாக யாராவது தனக்கு தொடர்ச்சியாக கிடைக்கச் செய்தால் எப்படி இருக்கும் என்ற எண்ணம் தோன்றியது. தனக்கு மட்டுமல்ல தன்னை போன்ற சிகரெட் அடிமைகள் எல்லோருக்குமே இத்தகைய ஒரு சேவை தேவை என்ற எண்ணம் ஏற்பட்டது. அதன் பயனாக இந்த சேவையை தானே ஏன் உருவாக்கக் கூடாது என்ற உத்வேகத்தோடு இமெயில், எஸ்எம்எஸ் வாயிலாக புகைப்பிடிப்பதற்கு எதிரான தகவல்களை தொடர்ச்சியாக அனுப்பி வைத்து அந்த பழக்கத்திலிருந்து விடுபட உதவும் குவிட் ஜூஸ் இணைய தளத்தை துவக்கினார்.
புகைப்பிடிப்பதை விட நினைப்பவர்கள் இந்த சேவையை பயன்படுத்திக்கொள்ளலாம். புகைப்பிடிக்காதவர்களும் தங்கள் நண்பர்களுக்கு இந்த சேவையை பரிந்துரைக்கலாம். அவர்கள் சார்பில் செல்போன் எண் அல்லது இமெயில் முகவரியை இந்த தளத்தில் சமர்ப்பித்தாலேயே போதுமானது.
சிகரெட்டிலிருந்து விடுபடுவதற்கான முகவரி: www.quitjuice.com
மறந்து வைத்த செல்போனை தேட ஒரு இணையதளம்.
சோபா,மேஜை,கட்டில்,புத்தக அலமாரி,அலுவலக் பை என எல்லா இடங்களிலும் தேடிப்பார்த்த பின் கடைசியில் பேப்பருக்கு அடியில் செல்போன் சாதுவாக இருக்கும்.இது போன்ற அனுபவங்கள் எல்லோருக்குமே உண்டு.
பொதுவாக இப்படி செல்போனை வைத்த இடம் தெரியாமல் திணறும் போது சுலபமாக செய்யக்கூடியது வேறு ஒருவரின் செல்லில் இருந்து உங்கள் செல்போன் எண்ணுக்கு அழைப்பு விடுப்பது தான்.சிங்ங்கும் செல் ஓசையை கொண்டு போனின் இடத்தை கண்டு[இடித்து விடலாம்.
ஆனால் அருகே யாரும் இல்லாமல் தனியாக மாட்டிகொண்டு விட்டால் இந்த வழியும் கை கொடுக்காது.
இது போன்ற நேரங்களில் உதவுவதற்காக என்றே அமெரிக்காவின் டேவ் டாசன் என்பவர் ஒரு எளிமையான இணையதளத்தை அமைத்திருக்கிறார்.
போனை மறந்து வைத்து தேடுபவர்களுக்கு உதவ வேண்டும் என்ற நோக்கத்தில் மின்னல் வேகத்தில் இந்த தளத்தை உருவாக்கியதாக டாசன் தெரிவித்துள்ளார்.ஐ கான்ட் பைட் மை போன் இது தான் அந்த தளத்தின் பெயர்.
செல் எங்கே என்று தெரியாத போது இந்த தளத்தில் உங்கள் போன் எண்ணை சமர்பித்தால் இந்த தளம் உடனே உங்கள் எண்ணை அழைக்கும்.அப்படியே போனை கண்டுபிடித்து விடலாம்.எளிமையான ஆனால் பயனுள்ள சேவை
அமெரிக்காவை மையமாக கொண்ட சேவை என்றாலும் மற்ற நாடுகளின் குறியீட்டு எண்ணை சமர்பித்து பயன்படுத்தி கொள்ளும் வசதி இருக்கிறது.ஆனால் போன் கட்டண விவரங்கள் பற்றிய தகவல் தெரியவில்லை.
————
இமெயிலில் அடுத்த புரட்சி ஷார்ட்மெயில் அறிமுகம்
இமெயிலில் ஜிமெயிலுக்கு பிறகு அடுத்த புதுமை அரங்கேறியிருக்கிறது.அதன் பெயர் ஷார்ட்பெயில்.
டிவிட்டரும் ,பேஸ்புக்கும் இமெயிலின் இடத்தை நிரப்பி வருவதாக கூறப்பட்டு வரும் காலத்தில் அறிமுகமாகியிருக்கும் ஷார்ட்மெயில் இமெயில் சேவையை சுருக்கி அதன் வீச்சை அதிகமாக்கியிருக்கிறது.
அதாவது பெயருக்கேற்ப இது இமெயில் மூலம் அனுப்பக்கூடிய செய்திகளை சுருக்கியிருக்கிறது.ஆம் ஷார்ட்மெயிலை பயன்படுத்தும் போது கடிதம் போல நீளமாக எல்லாம் எழுதி கொண்டிருக்க முடியாது.அதிகபட்சம் 500 எழுத்துக்களுக்குள் விஷயத்தை சொல்லி விட வேண்டும்.
டிவிடரில் எப்படி அதிகபடசம் 140 எழுத்துக்கள் என்ற கட்டுப்பாடு இருக்கிறதோ அதே போல ஷார்ட்மெயிலில் 500 எழுத்துக்களில் தொடர்பு கொள்ள வேண்டும்.
நீங்கள் அனுப்பும் செய்திகள் எப்போதுமே சுருக்கமாக சொல்ல வந்ததை மட்டும் சொல்வதாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தும் இந்த சேவையை இன்பாக்ஸில் வந்து குவியும் படிக்கப்படாத இமெயில்களால் திணறிப்போகிற்வர்கள் நிச்சயம் விரும்புவார்கள்.அதோடு இமெயில் சுமை என்பதும் இல்லாமல் போய்விடும்.
அது மட்டும் அல்ல இமெயிலோடு ஒட்டி கொண்டு வரும் இணைப்புகள் புகைப்படங்கள் போன்றவற்றுக்கும் இங்கு இடமில்லை.இது வெறும் தகவல் தொடர்புக்கு மட்டும் தான் !
ஷார்ட்மெயிலை நீங்கள் பயன்படுத்த துவங்கினீர்கள் என்றால் உங்கலுக்கு வரும் மெயில்களும் ஷார்ட் அண்டு ஸ்வீட்டாக இருந்தாக வேண்டும்.அதாவது அவையும் 500 எழுத்துகளுக்குள் இல்லை என்றால் திருப்பி அனுப்பபட்டுவிடும்.500 எழுத்துகளுக்குள் தொடர்பு கொள்ளுங்கள் என்னும் செய்தியோடு.
இமெயிலை எளிமையாக்க மட்டும் அல்ல அதனை சிறந்த முறையில் நிர்வகிக்கவும் இது பேருதவியாக இருக்கும்.எந்த மெயில் வந்தாலும் உடனே படித்து பார்த்து விடலாம்.தள்ளிப்போடுவதோ மெயில்களை குப்பை போல சேரவிடுவதோ நேராது.
டிவிட்டர் யுகத்திற்கு ஏற்ப ஷார்ட்மெயில் ரத்தின சுருக்கமாகியிருப்பதோடு சமூக வலைப்பின்னல் வசதியின் சாயலையும் கொண்டுள்ளது.
ஷார்ட்மெயிலில் செய்திகளை அனுப்பும் போதே அது அந்தரங்கமானதா அல்லது பொதுவில் பகிரக்கூடியதா என்பதை தீர்மானித்து கொள்ளலாம்.அந்தரங்கமானது என்றால் யாருக்கு அனுப்புகிறோமோ அவர் மட்டுமே பாக்க முடியும்.பொது என்றால் யார் வேண்டுமானாலும் படிக்கலாம்.பதில் அனுப்பலாம்.இப்படி இமெயில் வாயிலாகவே உரையாடலில் ஈடுபடலாம்.
பேஸ்புக் பயன்படுத்துபவர்கள் சுவர் செய்தி மூலமே நண்பர்களை தொடர்பு கொண்டுவிடுவதால் இமெயிலின் தேவையே இல்லாமல் போவதாக சொல்லபடுகிறது.ஷார்ட்மெயில் பிரபலமானால் இதன் மூலமே நண்பர்களுடன் கருத்து பரிமாற்றம் செய்யமுடியும் என்பதால் பேஸ்புக் தேவையில்லாமல் போகலாம்.
ஷார்ட்மெயிலில் முகவரி பெறுவதும் மிகவும் சுலபமானது.டிவிட்டர் கணக்கு வைத்திருப்பாவர்கள் அதன் மூலமே புதிய முகவரி பெறலாம்.ஐபோன் ஆன்டிராய்டு போன்களுக்கு ஏற்ற வடிவிலும் வருகிறது.
இமெயிலை புதுப்பிக்க வந்த புதுமையான் சேவை இந்த ஷார்ட்மெயில் என்று மனதார பாராட்டலாம்.
ஷார்ட்மெயில் பெற முகவரி;http://shortmail.com/
Vijay Tv Shows | Vijay Tv Programs | Vijay Tv online
Watch and download vijay tv shows like Jodi no 1, Kallikattu Pallikoodam, Yamirukka Bayamen, Airtel Super Singer Junior 2 in HQ only on tamilrain.
www.tamilrain.com
www.tamilrain.com
Subscribe to:
Posts (Atom)





