Tuesday, 16 August 2011

நிகழ்ச்சி ஏற்பாட்டில் கைகொடுக்கும் சூப்பர் இணையதளம்


உங்கள் அடுத்த நிகழ்ச்சி கலக்கபோகிறது பாருங்கள் என்று நம்பிக்கை தருகிறது டிரான்.டு இணையதளம்.அப்படியே, ரொம்ப சுலபம் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வதும் என்றும் உற்சாகம் அளிக்கிறது.
நிகழ்ச்சிகளை எற்பாடு செய்ய உதவும் இணையதளங்களில் ஒன்றான டிரான்.டு அந்த பணியை மிக அழகாக செய்து அசத்துகிறது.
நிகழ்ச்சி என்றால் மாதந்திர இலக்கிய கூட்டம் முதல் கொண்டு நண்பர்களுக்கான சந்திப்பு வரை எல்லா வகையான நிகழ்ச்சிகளையும் இந்த தளத்தின் மூலம் ஏற்பாடு செய்து கொள்ளலாம்.அதாவது மற்றவர்களை அழைத்து நடத்த விரும்பும் எந்த நிகழ்ச்சி என்றாலும் சரி இந்த தளம் அதனை திட்டமிட மிக அழகாக உதவுகிறது.அதிலும் மிக எளிதாக திட்டமிடலை மேற்கொள்ள வழி செய்கிறது.
இதற்கு முதல் படியாக நடத்த இருக்கும் நிகழ்ச்சிக்கான இணைய பக்கத்தை உருவாக்கி கொள்ள வேண்டும்.நிகழ்ச்சிக்கான பக்கத்தை அமைப்பதோ மிக மிக எளிது.உறுப்பினரானவுடன் நிகழ்ச்சியை உருவாக்க என்று பதத்தை கிளிக் செய்தால் நிகழ்ச்சிக்கான படிவம் வந்து நிற்கிறது.அதில் நிகழ்ச்சியின் தலைப்பை குறிப்பிட்டு நிகழ்ச்சியின் தனமையை அதன் கீழே உள்ள கட்டத்தில் விரிவாக இடம் பெறச்செய்யலாம்.நிகழ்ச்சி நடைபெறும் நாள் மறும் இடத்தையும் குறிப்பிடுவதற்கான பகுதிகள் உள்ளன.அவற்றை பூர்த்தி செய்து விட்டால் நிகழ்ச்சிக்கான ஏற்பாடு தயார்.
நிகழ்ச்சிக்கான அழைப்பிதழ் போல அமைந்திருக்கும் இந்த பக்கத்தின் இணைப்பை உங்கள் நண்பர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டியது தான்.இமெயில் பேஸ்புக் என எதன் மூலம் வேண்டுமானாலும் நண்பர்களை தொடர்பு கொள்ளலாம்.
நிகழ்ச்சிக்கான தகவலை அனுப்பி வைத்த பிறகு தான் விஷயமே இருக்கிறது.அழைப்பிதழை பெறும் நண்பர்கள் தங்களால் பங்கேற்க முடியுமா இல்லையா என்ற விவரத்தை தெரிவிக்க முடியும்.இதனால் நிகழ்ச்சிக்கு யார் யார் வரக்கூடும் என்பது பற்றி ஒரு தெளிவான எண்ணம் உண்டாகும்.அதோடு பங்கேற்க விருப்பம் தெரிவிததவர்களுக்கு நிகழ்ச்சி ஏற்பாடு தொடர்பான லேட்டஸ்ட தகவல்களை தெரிவிக்கவும் செய்யலாம்.
பங்கேற்பாளர்கள் விரும்பினால் நிகழ்ச்சி அழைப்பிதழை தங்கள் நட்பு வட்டாரத்திலும் பகிர்ந்து கொள்ளலாம்.இது மேலும் பலர் நிக்ழச்சி பற்றி அறிந்து கொள்ள வழி செய்து பங்கேற்பாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும்.
ஆக அழைப்பிதழை உருவாக்கி அனுப்பி வைத்தால் போதும் அது நட்பு வட்டாரத்தில் இருந்து விரிவடைந்து கொண்டே இருக்கும்.டிக்கெட் மூலம் கட்டணம் வசுலிக்கும் நிகழ்ச்சிகளை திட்டமிடவும் நித தளத்தை பயன்ப்டுத்தி கொள்ளலாம்.
ஆனால் நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை செய்து முடித்து நண்பர்களை அழைப்பது என்பது இந்த தளத்தின் சேவையில் ஒரு பாதி தான்.இரண்டாவது பாதியாக நிகழ்ச்சி சார்ந்த தொடர்புகளை ஏற்படுத்தி கொள்வதற்கான சாத்தியமும் நட்பை வளர்த்து கொள்வதற்கான வாய்ப்பும் தான் இந்த தளத்தை உயிரோட்டம் மிக்கதாக ஆகுகிறது.
நிகழ்ச்சிகள் என்பதே மற்றவர்களுடனான தொடர்பு மற்றும் நட்பு பரிமாற்றம் சார்ந்தது தானே.இந்த தளத்தை பயன்படுத்துபவர்கள் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றதும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதை குறிப்பிட்டு அது பற்றிய கருத்தையும் தெரிவிக்கலாம்.அதே போல தாங்கள் கலந்து கொள்ள உத்தேசித்துள்ள நிகழ்ச்சியையும் குறிப்பிடலாம்.
அதாவது டிவிட்டரில் சக உறுப்பினர்களை பின் தொடர்கிறோமோ அதே போல இந்த தளத்தில் ஒருவர் நிகழ்ச்சிகளை பின்தொடரலாம்.நிகழ்ச்சிகள் வழியேவே பேசிக்கொள்ளலாம்.கருத்து பரிமாற்றம் செய்து கொள்ளலாம்.
நிகழ்ச்சியால் கவர்ப்பட்டவ்ர்கள் அது தொடர்பான கருத்து மற்றும், அனுபவதையும் பகிர்ந்து கொள்ளலாம்.அந்த அனுபவ குறிப்புடன் புகைப்படம் மற்றும் வீடியோவையும் இணைக்கலாம்.நிகழ்ச்சிக்கான பக்கம் பங்கேற்பாளர்களின் கருத்துக்களோடு உயிரோட்டமானதாக இருக்கும்.நிகழ்ச்சி ஏற்பாட்டாளருக்கு இதை விட வேறு என்ன வேண்டும் சொல்லுங்கள்?
நண்பர்களுடன் பிக்னிக்கிற்கோ நீங்கள் படித்த புத்தகம் தொடர்பான வாசகர் சதிப்புக்கோ ஏற்பாடு செய்ய நினைத்தால் அழைப்பிதழ் கூட அடிக்காமல் அழகாக அதனை திட்டமிட்டு நடத்தி விடலாம்.கைமொடுத்து நிகழ்ச்சியை வெற்றி பெறச்செய்ய டிரான்.டு இருக்கவே இருக்கிறது.
இணையதள முகவரி;

No comments:

Post a Comment