இணையதளங்களை நண்பர்களோடு பகிர்ந்து கொள்வது மிகவும் சுலபமானது.இணையதள முகவரிகளை இமெயில் மூலமே டிவிட்டர் மூலமோ பகிர்ந்து கொண்டு அந்த தளங்களை பார்வையிட கேட்டுக்கொள்ளலாம்.
இன்னும் ஒரு படி மேலே போய் நாம் பார்த்து கொண்டிருக்கும் அதே இணையதளத்தை அதே நேரத்தில் நண்பர்களையும் பார்க்கச்செய்யலாம்.அப்படியே அந்த தளம் தொடர்பான கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டு உடனடி உரையாடலிலும் ஈடுபடலாம்!
சேனல்மீ இணைய சேவை இப்படி ஒரே நேரத்தில் இணையதளங்களை பார்வையிடும் வசதியை வழங்குகிறது.
நண்பர்களோடு சேர்ந்து இணையதளங்களை பார்வையிட விரும்புகிறவர்கள் இந்த தளத்தில் உள்ள கூகுல் போன்ற தேடல் கட்டத்தில் தாங்கள் உலாவ விரும்பும் இணையதளத்தின் முகவரியை டைப் செய்துவிட்டு நண்ப்ர்களுக்கு இமெயில் மூலம் அழைப்பு விடுக்க வேண்டும்.
அதன் பிறகு அதே இணையதளத்தை நண்பர்களும் பார்வையிடலாம்.அந்த பக்கத்தின் கீழே நண்பர்களோடு உரையாடுவதற்கான டோல் பார் ஒன்று தோன்றும்.அதில் தேடலுக்கான கட்டம் மற்றும் குறிப்புக்கான பகுதி ஆகியவை இருக்கின்றன.தேடல் கட்டத்தில் நாம் தேடுவதை நண்பர்களும் பார்க்க முடியும்.
அதே போல பார்த்து கொண்டிருக்கும் இணையதளம் தொடர்பான கருத்துக்களை குறிப்பாக தெரிவித்து துண்டு சீட்டு போல இணையதளம் மீதே வைக்கலாம்.பக்கத்தில் உள்ள அரட்டை வசதியை கொண்டு இணையதளத்தின் உள்ளடக்கம் தொடர்பான கருத்து பரிமாற்றத்திலும் ஈடுபடலாம்.
நண்பர்களோடு சேர்ந்து இணைய ஆய்வில் ஈடுபட அல்லது பரிசுப்பொருளை வாங்க இந்த வசதியை பயன்படுத்தி கொள்ளலாம்.சூப்பரான யூடியூப் வீடியோக்களை ஒன்றாக பார்த்து ரசிக்கவும் இந்த வசதி கைகொடுக்கும்.அதே போல பயணங்களை திட்டமிடவும் இந்த வசதியை பயன்படுத்தி கொள்ளலாம்.
அவரவர் தேவைக்கேறப இன்னும் பலவிதங்களில் இந்த வசதியை பயன்படுத்தி கொள்ளலாம். முக்கியமாக ஒரே இணையதளத்தை பார்க்கவும் கருத்துக்களை பரிமாரிக்கொள்ளவும் இமெயிலுக்கு மேல் இமெயில் அனுப்பி கொண்டிருக்கும் தேவை இருக்காது.
இணையதள முகவரி;
No comments:
Post a Comment