மும்பை, ஜூலை 5: 2010 ஆம் ஆண்டிற்கான தமிழ்த்திரையுலகின் சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது விக்ரமுக்கு கிடைத்துள்ளது. சிறந்த நடிகைக்கான விருது அஞ்சலிக்கும், சிறந்த திரைப்படத்திற்கான விருது மைனாவுக்கும் கிடைத்துள்ளது.
2010ம் ஆண்டிற்கான பிலிம்பேர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழில் சிறந்த திரைப்படமாக மைனாவும், சிறந்த நடிகராக விக்ரமும், சிறந்த நடிகையாக அங்காடித்தெரு நாயகி அஞ்சலியும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். சிறந்த இயக்குநராக அங்காடித்தெரு இயக்குநர் வசந்தபாலன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
பாலிவுட், தெலுங்கு, கன்னடம், மலையாள திரைப்படங்களுக்கும் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
விவரம் வருமாறு:
சிறந்த திரைப்படம்: மைனா (Mynaa)
சிறந்த இயக்குனர்: வசந்த பாலன் (அங்காடி தெரு – Angadi Theru)
சிறந்த நடிகர் (ஆண்): விக்ரம் (ராவணன் – Raavanan)
சிறந்த நடிகர் (பெண்): அஞ்சலி , அங்காடித்தெரு ( Anjali – Angadi Theru)
சிறந்த துணை நடிகர் பாத்திரம் (ஆண்): பார்த்திபன், ஆயிரத்தில் ஒருவன்(Parthiban, Ayirathil Oruvan)
சிறந்த துணை நடிகர் பாத்திரம் (பெண்): சரண்யா, தென்மேற்கு பருவக்காற்று (Saranya, Thenmerku Paruvakatru)
சிறந்த இசை இயக்குனர்: ஆர். ரகுமான் , விண்ணைத் தாண்டி வருவாயா (VTV)
சிறந்த பாடலாசிரியர்: தாமரை , பாடல் – மன்னிப்பாயா, படம் விண்ணைத்தாண்டி வருவாயா (Thamarai, VTV)
சிறந்த பின்னணி பாடகர் (ஆண்): கார்த்திக், பாடல் – உசிரே போகுதே, படம் – ராவணன், (Karthik, Raavanan, Usure Poguthey)
சிறந்த பின்னணி பாடகர் (பெண்): ஸ்ரேயா கோஷல் , பாடல் – உன் பேர் சொல்லும், படம் – அங்காடித் தெரு (Angadi Theru Un Perai Sollum)
No comments:
Post a Comment