Wednesday, 6 July 2011

நயன் – பிரபுதேவா திருமணம் – மும்பையில் ஏற்பாடுகள் தீவிரம்

நயன் - பிரபுதேவா திருமணம் – மும்பையில் ஏற்பாடுகள் தீவிரம்
நயன் - பிரபுதேவா திருமணம் – மும்பையில் ஏற்பாடுகள் தீவிரம்
சென்னை, ஜூலை 4: நடிகை நயன்தாரா – பிரபுதேவா திருமணம் மும்பையில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வருகின்றனர்.
முதல் மனைவி ரம்லத்திடம் இருந்து பிரபு தேவா சட்டப்படி விவாகரத்து பெற்றுள்ளார்.  நடிகை நயன்தாராவை திருமணம் செய்வதற்காகவே பிரபு தேவா மனைவியை பிரிந்தார். இதற்காக ரம்லத்துக்கும் குழந்தைகளுக்கும் வீடுகள் உள்ளிட்ட சொத்துக்களை எழுதி கொடுத்துள்ளார். ஆறு மாதத்துக்கு முன்பே இருவரும் பரஸ்பரம் பிரிய விருப்பம் தெரிவித்து விவாகரத்து மனுதாக்கல் செய்தனர். தற்போது விவாகரத்து கிடைத்துள்ளதால் நயன்தாரா, பிரபுதேவா திருமணத்துக்கு தடை நீங்கியுள்ளது.
அடுத்த மாதம் (ஆகஸ்டு) மும்பையில் இருவருக்கும் திருமணம் நடை பெற உள்ளது. திருமண புடவை மற்றும் நகைகள் வாங்கும் பணியில் நயன்தாரா தீவிரமாக உள்ளார். திருமண அழைப்பிதழ் அச்சிடும் பணியும் நடக்கிறது. ரம்லத்தை பிரபுதேவா காதலித்துதான் மணந்தார். அந்த திருமணத்துக்கு பிரபுதேவா வீட்டில் எதிர்ப்பு இருந்ததால் யாருக்கும் தெரியாமல் ரகசியமாக நடந்தது.
ஆனால் நயன்தாராவுடனான திருமணத்தை நடிகர் நடிகைகள் உள்ளிட்ட திரையுலகினர் உறவினர்கள் எல்லோரையும் அழைத்து விமரிசையாக நடத்த முடிவு செய்துள்ளார். இரு வீட்டு பெற்றோரும் திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்துள்ளதால் அவர்களும் திருமண வேலைகளில் ஆர்வமாக ஈடுபட்டுள்ளனர்.
முகூர்த்த பட்டுப்புடவை நகைகள் வாங்கும் பணிகளில் நயன்தாரா ஈடுபட்டுள்ளார். திருமணத்துக்கு பிறகு நடிப்புக்கு முழுக்கு போட திட்டமிட்டுள்ளார். புதுப்படங்களில் நடிக்க ஒப்புக் கொள்ளவில்லை. கடைசியாக அவர் தெலுங்கில் நடித்த ராமராஜ்ஜியம் படப்பிடிப்பு கடந்த வாரம் முடிந்தது. அப்போது படக்குழுவினருக்கு விருந்து கொடுத்து கண்ணீருடன் விடை பெற்றார்.
திருமணத்துக்கு பின் மும்பையிலேயே குடியேற திட்டமிட்டுள்ளனர். இதற்காக அங்கு வீடு பார்க்கிறார்கள்.

No comments:

Post a Comment