Wednesday, 6 July 2011
நயன் – பிரபுதேவா திருமணம் – மும்பையில் ஏற்பாடுகள் தீவிரம்
நயன் - பிரபுதேவா திருமணம் – மும்பையில் ஏற்பாடுகள் தீவிரம்
சென்னை, ஜூலை 4: நடிகை நயன்தாரா – பிரபுதேவா திருமணம் மும்பையில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வருகின்றனர்.முதல் மனைவி ரம்லத்திடம் இருந்து பிரபு தேவா சட்டப்படி விவாகரத்து பெற்றுள்ளார். நடிகை நயன்தாராவை திருமணம் செய்வதற்காகவே பிரபு தேவா மனைவியை பிரிந்தார். இதற்காக ரம்லத்துக்கும் குழந்தைகளுக்கும் வீடுகள் உள்ளிட்ட சொத்துக்களை எழுதி கொடுத்துள்ளார். ஆறு மாதத்துக்கு முன்பே இருவரும் பரஸ்பரம் பிரிய விருப்பம் தெரிவித்து விவாகரத்து மனுதாக்கல் செய்தனர். தற்போது விவாகரத்து கிடைத்துள்ளதால் நயன்தாரா, பிரபுதேவா திருமணத்துக்கு தடை நீங்கியுள்ளது.
அடுத்த மாதம் (ஆகஸ்டு) மும்பையில் இருவருக்கும் திருமணம் நடை பெற உள்ளது. திருமண புடவை மற்றும் நகைகள் வாங்கும் பணியில் நயன்தாரா தீவிரமாக உள்ளார். திருமண அழைப்பிதழ் அச்சிடும் பணியும் நடக்கிறது. ரம்லத்தை பிரபுதேவா காதலித்துதான் மணந்தார். அந்த திருமணத்துக்கு பிரபுதேவா வீட்டில் எதிர்ப்பு இருந்ததால் யாருக்கும் தெரியாமல் ரகசியமாக நடந்தது.
ஆனால் நயன்தாராவுடனான திருமணத்தை நடிகர் நடிகைகள் உள்ளிட்ட திரையுலகினர் உறவினர்கள் எல்லோரையும் அழைத்து விமரிசையாக நடத்த முடிவு செய்துள்ளார். இரு வீட்டு பெற்றோரும் திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்துள்ளதால் அவர்களும் திருமண வேலைகளில் ஆர்வமாக ஈடுபட்டுள்ளனர்.
முகூர்த்த பட்டுப்புடவை நகைகள் வாங்கும் பணிகளில் நயன்தாரா ஈடுபட்டுள்ளார். திருமணத்துக்கு பிறகு நடிப்புக்கு முழுக்கு போட திட்டமிட்டுள்ளார். புதுப்படங்களில் நடிக்க ஒப்புக் கொள்ளவில்லை. கடைசியாக அவர் தெலுங்கில் நடித்த ராமராஜ்ஜியம் படப்பிடிப்பு கடந்த வாரம் முடிந்தது. அப்போது படக்குழுவினருக்கு விருந்து கொடுத்து கண்ணீருடன் விடை பெற்றார்.
திருமணத்துக்கு பின் மும்பையிலேயே குடியேற திட்டமிட்டுள்ளனர். இதற்காக அங்கு வீடு பார்க்கிறார்கள்.
ராணாவில் காமெடியில் கலக்குவார் ரஜினி
உடல் நலக்குறைவு காரணமாக சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெறறார் ரஜினி. தற்போது அங்கேயே ஓய்வு எடுத்து வருகிறார். ராணா படப்பிடிப்பின் போதுதான் ரஜினிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இந்நிலையில், ராணா படம் குறித்து அதன் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் அளித்த பேட்டி:
ராணா படத்தின் கதை 17-ம் நூற்றாண்டை சேர்ந்த ஒரு அரசனை பற்றியது. ஆக்ஷன், சென்டிமென்ட், காதல் எல்லாம் இருக்கும். பெரிய போர்க்கள யுத்த காட்சி விஸ்தாரமான அரண்மனை, தர்பார் மண்டபம் போன்றவைகளும் இருக்கும். இதில் ரஜினிக்கு மூன்று வேடங்கள். ஒரு வேடம் காமெடி கேரக்டராக உருவாக்கப்பட்டு உள்ளது.
படத்தில் நான்கு முதல் ஐந்து நாயகிகள் இருப்பார்கள். அதில் தீபிகா முக்கிய நாயகியாக இருப்பார். ரஜினி உடல் நிலையை கருத்தில் கொண்டு ராணா கதையில் மாற்றம் செய்யவில்லை. அப்படி மாற்றுவதை ரஜினியும் விரும்பமாட்டார்.
இந்த கதை ரஜினியுடையது. முழு திரைக்கதையும் அவருக்கு தெரியும். படப்பிடிப்பு துவங்கியதும் ரஜினியால் எந்த அளவுக்கு சிரமம் எடுத்து நடிக்க முடியும் என்று பார்த்து அதன்படி முடிவு செய்வேன். டாக்டர்களிடமும் ஆலோசனை செய்வேன்.
இவ்வாறு இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் கூறினார்.
நடிகர் ரஜினிகாந்த்
2010 பிலிம்பேர் விருதுகள் அறிவிப்பு – சிறந்த நடிகர் விக்ரம், சிறந்த நடிகை அஞ்சலி
2010 பிலிம்பேர் விருதுகள் அறிவிப்பு – சிறந்த நடிகர் விக்ரம், சிறந்த நடிகை அஞ்சலி
2010ம் ஆண்டிற்கான பிலிம்பேர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழில் சிறந்த திரைப்படமாக மைனாவும், சிறந்த நடிகராக விக்ரமும், சிறந்த நடிகையாக அங்காடித்தெரு நாயகி அஞ்சலியும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். சிறந்த இயக்குநராக அங்காடித்தெரு இயக்குநர் வசந்தபாலன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
பாலிவுட், தெலுங்கு, கன்னடம், மலையாள திரைப்படங்களுக்கும் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
விவரம் வருமாறு:
சிறந்த திரைப்படம்: மைனா (Mynaa)
சிறந்த இயக்குனர்: வசந்த பாலன் (அங்காடி தெரு – Angadi Theru)
சிறந்த நடிகர் (ஆண்): விக்ரம் (ராவணன் – Raavanan)
சிறந்த நடிகர் (பெண்): அஞ்சலி , அங்காடித்தெரு ( Anjali – Angadi Theru)
சிறந்த துணை நடிகர் பாத்திரம் (ஆண்): பார்த்திபன், ஆயிரத்தில் ஒருவன்(Parthiban, Ayirathil Oruvan)
சிறந்த துணை நடிகர் பாத்திரம் (பெண்): சரண்யா, தென்மேற்கு பருவக்காற்று (Saranya, Thenmerku Paruvakatru)
சிறந்த இசை இயக்குனர்: ஆர். ரகுமான் , விண்ணைத் தாண்டி வருவாயா (VTV)
சிறந்த பாடலாசிரியர்: தாமரை , பாடல் – மன்னிப்பாயா, படம் விண்ணைத்தாண்டி வருவாயா (Thamarai, VTV)
சிறந்த பின்னணி பாடகர் (ஆண்): கார்த்திக், பாடல் – உசிரே போகுதே, படம் – ராவணன், (Karthik, Raavanan, Usure Poguthey)
சிறந்த பின்னணி பாடகர் (பெண்): ஸ்ரேயா கோஷல் , பாடல் – உன் பேர் சொல்லும், படம் – அங்காடித் தெரு (Angadi Theru Un Perai Sollum)
Tuesday, 5 July 2011
இன்று ஒரு பரிசு தருவோம்.;அழைக்கும் இணையதளம்.
கிப்ட் ஏ ஸ்டிரேஞ்சர் என்னும் அந்த தளம் அறிமுகமில்லாதவர்களுக்கு பரிசளித்து உலகம் முழுவதும் மகிழ்ச்சி அலையை பரவச்செய்ய உதவுகிறது.
இந்த தளம் செயல்படும் விதமும் சுவாரஸ்யமானது.யாரோ ஒருவருக்கு பரிசளித்து மகிழ்ச்சியை அளிக்க விரும்புகிறவர்கள் இந்த தளத்தில் உள்ள பரிசளிக்க பகுதியை கிளிக் செய்தால் உலகில் எங்கோ ஒரு மூளையில் உள்ள ஒருவரின் முகவரி திரையில் வந்து நிற்கிறது.கூகுலின் வரைபடத்தில் இந்த முகவரி இடம்பெறுகிறது.
அந்த முகவரியை அச்சிட்டு தபாலில் பரிசு பொருளை அனுப்பி வைக்கலாம்.இந்த தளம் உத்தேசமாக பரிந்துரைக்கும் முகவரியையும் தேர்வு செய்து கொள்ளலாம்.அல்லது வேறு முகவரியையும் கோரலாம்.
பர்சளிக்கப்பட்ட நபரின் முகவை வரைபடத்தில் நீல நிற வண்ண பலுனாக காட்டப்பட்டிருக்கும்.பரிசளிக்கும் முன் யார் யார் எந்த பரிசுகளை வழங்கியுள்ளனர் என்றும் பார்த்து கொள்ளலாம்.
அடுத்தவர்களை மகிழ வைப்பதே உண்மையான மகிழ்ச்சி என்று கருதுபவர்கள் இந்த தளத்தை நிச்சயம் விரும்புவார்கள்.
யோசித்து பாருங்கள்,ஏதோ ஒரிடத்தில் இருக்கும் ஒருவர் திடிரென தனக்கு ஒரு பரிசு பொருள் வந்திருப்பதை பார்த்தால் எப்படி மகிழ்ச்சி அடைவார் என்று?அத்தகைய மகிழ்ச்சியை வழங்குவோம்.பரிசளிப்பதன் ம்கிமையை பரவ செய்வோம்.
இணையதள முகவரி;http://www.giftastranger.net/
Subscribe to:
Posts (Atom)



























